
மீண்டும், 'கெட்-அப்'பை மாற்றும், அஜித்!
கடைசியாக, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய, குட் பேட் அக்லி என்ற படத்தில் மாறுபட்ட, 'கெட்-அப்'பில் நடித்தார், அஜித்குமார். அந்த படம், 300 கோடி ரூபாய் வசூல் செய்ததால், தன், 64வது படத்தையும் அவரையே இயக்க, 'கால்ஷீட்' கொடுத்துள்ளார்.
மேலும், புதிய படத்தில், இதற்கு முன் தான் நடித்த ரெட் மற்றும் வேதாளம் படங்களை போன்று மொட்டை தலை, 'கெட்-அப்'பில் நடிக்க போகிறார், அஜித். அந்த படத்தில் தான் பங்கேற்ற ஓரிரு கார் ரேஸ் காட்சிகளையும் இணைக்க திட்டமிட்டுள்ளார்.
சினிமா பொன்னையா
தெலுங்குக்கு சென்ற, விக்ரம் பிரபு!
சிவாஜி கணேசனின் பேரனான நடிகர், விக்ரம் பிரபு, கோலிவுட்டில் மூன்றாம் தட்டு நடிகராகவே இருந்து வருகிறார். அதனால் அவர், கேரக்டர் நடிகராக உருவெடுத்துள்ளார்.
தெலுங்கில், கதையின் நாயகியாக, அனுஷ்கா நடித்துள்ள, காட்டி என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், விக்ரம் பிரபு. இதே போன்று அடுத்தபடியாக, தமிழிலும் முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படங்களில், சிறப்பான வேடம் கிடைத்தால் நடிப்பதற்கும் தயாராக இருப்பதாகவும் கூறி வருகிறார்.
— சி.பொ.,
விஜய் சேதுபதி படத்தை கைப்பற்றிய, சம்யுக்தா மேனன்!
தனுசுக்கு ஜோடியாக, வாத்தி படத்தில் நடித்த சம்யுக்தா மேனன், லாரன்ஸ்க்கு ஜோடியாக, பென்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது, தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் படத்தையும் கைப்பற்றி இருக்கிறார்.
இந்த படத்தை கைப்பற்ற ஏற்கனவே, விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள, த்ரிஷா, நித்யா மேனன் போன்ற நடிகைகள் முயற்சி எடுத்தனர். இந்நிலையில், இந்த படத்தை தயாரிக்கும் நடிகை சார்மி, தன் தோழி என்பதால், அவர் மூலமாக இந்த பட வாய்ப்பை கைப்பற்றியுள்ளார், சம்யுக்தா மேனன்.
— எலீசா
அழுத்தமான வேடம் தேடும், மாளவிகா!
இதுவரை தான் நடித்த படங்களில், தங்கலான் படத்தில் மட்டுமே, ஓரளவு அழுத்தமான வேடத்தில் நடித்தார், மாளவிகா மோகனன். மற்ற படங்களில், 'டம்மி'யாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதால், அவரது நடிப்பு திறமை மீது, அபிமான ரசிகர்களுக்கே நம்பிக்கை போய் விட்டது.
'சும்மா உடல் கவர்ச்சியை மட்டுமே காண்பித்தால் போதாது. திறமையை காண்பித்து, 'ஸ்கோர்' செய்ய வேண்டும். அப்போது தான், சினிமாவில் சாதிக்க முடியும்...' என, 'கமென்ட்' கொடுத்து, நடிகைக்கு அதிர்ச்சி கொடுத்து விட்டனர், ரசிகர்கள்.
அதனால், 'இனிமேல் ஆண்டுக்கு இரண்டு படத்தில் நடித்தாலும், அழுத்தமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன்...' எனக் கூறி, தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரங்களாக தேடி வருகிறார், மாளவிகா மோகன்.
— எலீசா
விஜய்சேதுபதி படத்துக்கு, ஹிந்தியில் தலைப்பா?
தற்போது, தலைவன்-தலைவி படத்தில் நடித்து வரும், விஜய்சேதுபதி, அடுத்தபடியாக தெலுங்கு இயக்குனர், பூரி ஜெகநாத் இயக்கும் படத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என, மூன்று மொழி படத்தில் நடிக்கப் போகிறார். அதனால், இந்த படத்திற்கு, பிஷாம் தேஹி என்று ஹிந்தியில், 'டைட்டில்' வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில், ஹிந்திக்கு எதிர்ப்பு மனநிலை இருந்து கொண்டிருப்பதால், இந்த படத்தின் தமிழ் பதிப்புக்கு வேறு, 'டைட்டில்' வைக்குமாறு, இயக்குனரை கேட்டுக் கொண்டுள்ளார், விஜய்சேதுபதி.
— சினிமா பொன்னையா
கருப்பு பூனை!
தளபதி நடிகரின் கடைசி படத்திலும் நடித்துள்ளார், பீஸ்ட் நடிகை. அந்த படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு அன்று, அப்படக்குழு மட்டுமின்றி, கோலிவுட்டில் சில அபிமானிகளையும் அழைத்து, நட்சத்திர ஹோட்டலில் விருந்து கொடுத்துள்ளார்.
அம்மணியின் இந்த உபசரிப்பு, பாலிவுட் பாணியில் இருந்ததால், அதில் கிறங்கிப் போன கோலிவுட்வாசிகள், நடிகையின் தீவிர அபிமானிகளாக மாறிவிட்டதோடு, அடுத்தடுத்து அவரை அரவணைப்பதற்கு தயாராக இருப்பதாகவும் உறுதி கொடுத்துள்ளனர். இதன் காரணமாகவே, பீஸ்ட் நடிகையின் ஆட்டம், கோலிவுட்டில் அதிரடியாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.
சினி துளிகள்!
தன் மகன், ராக்கி பார்த்திபனை விரைவில் இயக்குனராக களம் இறக்கும் நடிகர் பார்த்திபன், அப்பத்தில் தானும், முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
விஜயுடன், ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்திருக்கும், பூஜா ஹெக்டே, அதையடுத்து, லாரன்ஸ் உடன், காஞ்சனா-4 படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கில், கீர்த்தி சுரேஷ் நடித்த, உப்பு கப்புரம்பு என்ற படம், தியேட்டரில் இல்லாமல், நேரடியாக, ‛ஓடிடி'யில் வெளியாகி உள்ளது.
அவ்ளோதான்!