தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை - கணக்கெடுப்பு!

கவிதைச்சோலை - கணக்கெடுப்பு!

கவிதைச்சோலை - கணக்கெடுப்பு!


PUBLISHED ON : டிச 15, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 15, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு

கேட்கப்படுகிறது

பல மாநிலங்களில்

பல தலைவர்களால்!

பல ஆயிரம் ஜாதிகள்

இந்த நாட்டில்

சிலர் தலைவர்களாக

இருக்க ஜாதிகள்

தேவைப்படுகிறது!

மக்கள் ஒற்றுமையாக

அமைதியாக வாழ

ஜாதி சங்கங்கள்

ஒழிக்கப்பட வேண்டும்!

ஏழை, எளியவர்களை

கிராமப்புற பாமரர்களை

ஏற்றம் பெறச் செய்ய

பல வழிகள் உண்டு!

கல்விக்கும்

வேலை வாய்ப்பிற்கும்

மட்டுமே இட ஒதுக்கீடு

தேவைப்படுகிறது!

அந்தந்த சமூகத்தில்

வேலை வாய்ப்பு பெற்றவர்கள்

உயர்ந்தவர்கள்

செல்வந்தர்கள்!

பின் தங்கிய மாணவ

மாணவியரை ஆளுக்கொருவர்

தத்தெடுத்து படிக்க

வைத்தால் போதும்...

ஜாதி மதம் பாராத

தொண்டு நிறுவனங்கள்

தன்னார்வலர்கள் இங்கு

ஏராளம் ஏராளம்!

அரசின் ஆணைகளை விட

நல் மனிதர்களின் உதவிகள்

எப்போதும் வாழ வைக்கும்

எல்லாரையும்!

- சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us