Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை: எதுவும் நம் கையில்!

கவிதைச்சோலை: எதுவும் நம் கையில்!

கவிதைச்சோலை: எதுவும் நம் கையில்!


PUBLISHED ON : மே 24, 2026

Follow on Google

PUBLISHED ON : மே 24, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இருள் என்பது

இயற்கையே...

அதில் ஒளியேற்றுவது

நம் கையில்!

தவறுகள் நடப்பது

இயல்பே...

தண்டிப்பதும், மன்னிப்பதும்

நம் கையில்!

சாதி மத கொடிகளை

உயர்த்தி பிடிப்பதை மாற்றி

சமத்துவ கொடியினை

ஏந்த வேண்டும் நம் கையில்!

கல்லும் முள்ளும்

நிறைந்த பாதையை

நடைபாதையாய் மாற்றுவது

நம் கையில்!

கரடு முரடாய் காணப்படும் கல்லை

சிலையாய் வடிப்பது

நம் கையில்!

கடல் அலைகள் சீறுவது இயற்கையே...

கடலை கடக்க

கட்டுமரம் செய்வது நம் கையில்!

விண்ணில் பறக்கும்

பட்டங்கள்...

அதை பறக்க விடும்

நுாலானது நம் கையில்!

சிகரம் தொட எண்ணுவது இயல்பே...

அதை செயலாற்றி

வெற்றி காண்பது

நம் கையில்!

- ஜி.சுந்தரராஜன், திருத்தங்கல்.

தொடர்புக்கு : 8675014239


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap