Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!


PUBLISHED ON : மே 24, 2026

Follow on Google

PUBLISHED ON : மே 24, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எந்த வகை சுண்டல் செய்தாலும், கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து விழுதாக அரைத்துக் கலந்து கிளறி இறக்கினால், சுவையாக இருக்கும்; உடலுக்கும் நல்லது

* ஊறுகாய் செய்யும்போது உப்பை லேசாக வறுத்துப் போட்டால், ஊறுகாயின் மேல் வெண்மை நிறம் படியாது

* தோசை ஊற்றுவதற்கு முன், தோசைக்கல்லில் எண்ணெய் தேய்ப்பதற்கு பதிலாக தண்ணீர் தெளித்து துடைத்து, மாவை ஊற்றினால் தோசை மொறுமொறுப்பாக வரும்

* எந்த வகை சூப்பாக இருந்தாலும், அதில் அரை தேக்கரண்டி இஞ்சிச் சாறு சேர்த்தால், சூப் சுவையாக இருக்கும்

* காலையில் செய்த சாம்பாரை இரவில் உபயோகப்படுத்த சிறிது வெந்தயம், தனியாவை வறுத்துப் பொடித்து அதனுடன், ஒரு தேக்கரண்டி சீரகத்தை சேர்த்து அரைத்து விட சாம்பார் மணக்கும்

* கேரட் பாயசம் செய்து இறக்கிய பின் அத்துடன் பாதாம், 'எசன்ஸ்' சேர்த்தால், அசல் பாதாம் கீர் போல இருக்கும்.

சமையலில் செய்யக்கூடாதவை:

* காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்கக்கூடாது

* ரசம் அதிகம் கொதிக்கக்கூடாது

* கீரைகளை மூடி போட்டு சமைக்க கூடாது

* உணவு சூடாக இருக்கும் போது அதில் எலுமிச்சம் பழம் பிழியக் கூடாது

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பை அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap