தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/கோடைக்கால டிப்ஸ்!

கோடைக்கால டிப்ஸ்!

கோடைக்கால டிப்ஸ்!

1


PUBLISHED ON : ஏப் 05, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 05, 2026

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூரியன் உச்சியில் வரும் சமயம் வெளியே தலை காட்டாதீர். நிறைய தண்ணீர் பருகுங்கள். உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

* தர்ப்பூசணி, பப்பாளி, கிர்ணி, வாழைப்பழம் எல்லாம் உங்கள் உடல் சூட்டைக் குறைக்கும். கோடைக்கால நோய்கள் பலவும் நீரின் வழி பரவும். அதனால், கொதிக்க வைத்து ஆறவிட்டுக் குடியுங்கள். எலுமிச்சம் பழ ஜூஸ் மிகவும் நல்லது

* ஐஸ்க்ரீம் மற்றும் குச்சி ஐஸ் ஆகியவற்றை தவிருங்கள். இது, மஞ்சள் காமாலைக்கும், காலராவுக்கும் கதவைத் திறந்து விடும்.

* காய்கறிகளை நன்றாக வேகவைத்து உண்ணவும். கோடைக் காலத்தில் உணவு சீக்கிரம் கெட்டுவிடும். அதனால், சமைத்த உடனே சாப்பிடுவது சிறந்தது

* தெரு ஓர கடையில் விற்கப்படும் உணவு நாக்கில் நீர் ஊறவைக்கும் தான். அதிலும் சாட், ஜூஸ் வகைகள் சப்புக் கொட்ட வைக்கும். 'பாஸ்ட் புட்' விற்கிற இடம் பக்கமே திரும்பாதீர்கள்

* 'சன் ஸ்ட்ரோக்' என்பது பலரையும் பாதிக்கும் பிரச்னை. குடை, தொப்பி போன்றவை இல்லாமல் வெயிலில் செல்லவே கூடாது

* அதிக சூடு பாதிப்பு ஏற்பட்டால் பயங்கரமாக வியர்த்துக் கொட்டும். பலவீனமாக இருக்கும். சருமம் நிறமிழக்கும். நாடித்துடிப்பு கூட பலமிழந்து போகலாம். வாந்தி- மயக்கம் வரும். இந்த பாதிப்புகள் தென்பட்டதும், குளிர்ச்சியான இடத்தில் சற்று ஓய்வெடுக்கலாம். நிறையத் தண்ணீர் குடிக்கலாம்

* கோடை காலத்தில், சரும நோய்கள் அதிகமாக வர வாய்ப்புள்ளது. கண் பாதுகாப்பு தேவை. சில நோய்த் தொற்றுக் கிருமிகள் காரணமாக மூச்சுப் பிரச்னை, சளித்தொல்லை, இருமல், வயிற்றுப் போக்கு, வாந்தி வரலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us