sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மார் 10, 2024

Google News

PUBLISHED ON : மார் 10, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா -கே

சொந்த வேலையாக, பெங்களூரு சென்ற லென்ஸ் மாமா, ஒரு வாரத்துக்கு பின், அன்று தான் அலுவலகம் திரும்பியிருந்தார்.

உள்ளே நுழைந்த மாமாவை, ஆரவாரமாக வரவேற்று, 'என்ன மாமா, ஒரு வாரம் ஆளையே காணோம்?' என்று அக்கறையாக விசாரித்தார், உ.ஆசிரியை ஒருவர்.

தான் வெளியூர் சென்று வந்ததை கூறி, 'மார்ச் 8ம் தேதி, மகளிர் தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடினீர்களா?' என்று கேட்டார், மாமா.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும், மகளிர் தினத்தன்று, தான் சந்திக்கும் பெண்களுக்கு, பூங்கொத்து கொடுத்து, வாழ்த்து சொல்ல தவற மாட்டார், மாமா. நன்கு அறிமுகமானவர்கள் என்றால், 'ஸ்வீட் எடு... கொண்டாடு...' விளம்பரத்தில் வருவது போல், 'சாக்லேட் பார்' ஒன்றை கொடுப்பார்.

'இந்த முறை, உங்களது வாழ்த்தும், சாக்லேட்டும் கிடைக்கவில்லை...' என்று ஆதங்கப்பட்டார், உ.ஆ.,

'சரி... சரி... அடுத்த ஆண்டு சிறப்பாக கொண்டாடிடலாம். இப்ப, உங்களுக்கு ஒரு நல்ல கதை சொல்லப் போகிறேன்...' என்றார்.

'ஏதாவது வில்லங்கமான கதையாதான் இருக்கப் போகிறது...' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, கதையை கேட்டபடியே, என் வேலையில் ஈடுபடலானேன்.

லென்ஸ் மாமா கூறிய கதை இது தான்:

ஒரு குடும்பம் நல்லா இருக்குன்னு சொன்னா, அதுக்கு இல்லத்தரசிகள் தான் காரணம். இயற்கையாகவே பெண்களுக்குன்னு சில சிறப்பான குணங்கள் உண்டு.

ஒருமுறை, பவேரிய நாட்டு அதிபருக்கும், ஜெர்மனி நாட்டு சக்கரவர்த்திக்கும் தகராறு வந்தது.

சக்கரவர்த்தி என்ன பண்ணினார்ன்னா, ஒரு பெரிய படையை திரட்டி போய், பவேரியாவின் தலைநகரை வளைச்சுட்டார்.

ஆனாலும், அவருக்கு கோபம் அடங்கல. பவேரிய தலைநகரை தரை மட்டமாக்கணும்ன்னு தீர்மானிச்சார். அந்த சமயத்துல, அவரு மனசுல ஒரு ஓரமா கொஞ்சம் இரக்கம் தலை காட்டிச்சு. உடனே, ஒரு அறிவிப்பு கொடுத்தார்.

'பெண்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கிறேன். அவரவர்கள் முதுகுல சுமக்கக் கூடிய அளவு பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேறலாம்...' என்று, அறிவித்தார்.

அதுக்கப்புறம், அவரின் படைத் தலைவர்களை கூப்பிட்டு, 'பெண்களெல்லாம் தட்டுமுட்டு சாமான்களோடு ஊரை விட்டு வெளியேறியவுடன், தலைநகரை கொளுத்திடுங்க...' என, உத்தரவு போட்டார்.

கொஞ்ச நேரத்தில், பவேரிய நாட்டு பெண்களெல்லாம் ஒவ்வொருத்தரா தட்டுத்தடுமாறி வெளியே வந்துகிட்டிருந்தாங்க.

சக்கரவர்த்தி பார்த்தார்.

அவருக்கு அதிர்ச்சி. என்ன நடந்தது தெரியுமா?

பவேரிய நாட்டு பெண்கள், முதுகுல சுமந்து வந்தது, வீட்டு பொருட்களை அல்ல; அவங்கவங்க வீட்டுக்காரரை.

கடைசியா, பவேரிய நாட்டு மன்னனை, அவனுடைய ராணி சுமந்துகிட்டு தள்ளாடி, நடந்து வந்துக்கிட்டிருந்தாங்க.

இதை பார்த்த ஜெர்மனி நாட்டு சக்கரவர்த்திக்கு மனசு நெகிழ்ந்தது.

பவேரியாவுக்கு மன்னிப்பு கொடுத்து, படைகளுடன் தன் நாட்டுக்கு திரும்பினார்.

இந்த காலத்தில் எல்லாம் அந்த அளவுக்கு நடக்குமாங்கிறது சந்தேகம் தான்.

அது மாதிரி ஒரு நிலைமை இப்ப வந்து... உங்களால முடிஞ்ச அளவுக்கு எதையாவது முதுகுல சுமந்துக்கிட்டு போங்கன்னு சொன்னா... பலர், 'டிவி' பெட்டியை தான் சுமந்துக்கிட்டு போவாங்கன்னு நினைக்கிறேன்.

- என்று கூறி முடித்தவர், என் பக்கம் திரும்பி, 'லுக்' விட்டார்.

'பெண்களை பாராட்டுகிறாரா அல்லது குப்புற தள்ளுகிறாரா...' என்று புரியாமல், 'ஙே' என்று விழித்தார், உ.ஆ.,



நம் நாட்டை ஆண்ட மன்னர்களின் வித்தியாசமான நடவடிக்கைகள் சில...

* தஞ்சை மராட்டிய ராஜ குடும்பத்தின் கடைசி மன்னருக்கு மூன்று மனைவியர். இது தவிர, 17 பெண்களை மணந்தாராம். 1907ல், கூட இருந்த இந்த ராணிகளில் மூவர், அரண்மனையில் வசித்து வந்தனராம்.

* மதுரை கள்ளர்கள் என்றாலே, பல மன்னர்களுக்கு குலை நடுங்கும். ராபர்ட் க்ளைவ் மற்றும் ஸ்டிரிஞ்சர் என்ற ஆங்கிலேய முதன்மை தளபதிகளின் குதிரைகளையே இவர்கள், 'அபேஸ்' செய்துள்ளனர்.

விஜயநகர சாம்ராஜ்யத்தில், விஜயரகுநாத் சேதுபதிக்கு, கள்ளர்களை கண்டாலே பயமாம். இதனால், அவர் கட்டில் மெத்தையில் படுக்க மாட்டாராம்.

மாறாக, அரண்மனை கூரையிலிருந்து நீண்ட கனமான சங்கிலியால் இணைக்கப்பட்ட கட்டிலில், கைக்கு எட்டாத உயரத்தில் படுப்பாராம்.

ஒரு இரவு, அரண்மனையின் ஓட்டை பிரித்து அந்த கன சங்கிலியின் வழியாகவே இறங்கி, மன்னரின் நகைகள் அனைத்தையும் களவாடி சென்று விட்டானாம், ஒரு கள்ளன்.

அடுத்த நாள், உண்மையறிந்து திகைத்த மன்னர், 'நகைகளை கண்டுபிடித்து, திரும்ப சேர்ப்பவருக்கு, அரசு நிலம் இனாமாக வழங்கப்படும்...' என்று, அறிவித்தார்.

அந்த கள்ளனும், அரண்மனைக்கு வந்து, களவாடிய அனைத்து நகைகளையும் திரும்ப தந்து, இலவச நிலத்தை, மன்னரிடமிருந்து பெற்றுச் சென்றானாம்.

அதன்பின், ரகசியமாக, அவனை துாக்கிலிட சொல்லி விட்டார், மன்னர்.

* திருவாங்கூர் மன்னருக்கு, தன்னை வேத விற்பன்னராக மாற்றிக்கொள்ள ஆசை. என்ன செய்வது என, அவருடைய பூசாரிகளிடம் கேட்டார். அவர்கள் கலந்து பேசி, ஒரு தங்க பசுவை செய்து, அதன் தலை வழியாக நுழைந்து, வால் வழியாக வெளி வந்தால், மாற்ற இயலும் என்றனராம். மன்னரும், அப்படியே செய்து வெளியே வந்தாராம்.

* மன்னருடைய சிம்மாசனத்தில், மயில் வடிவம் இருக்கும். சிம்மாசனத்தில், சில்க், வெல்வெட் ஆகியவற்றால் தைக்கப் பெற்று அதில் ஏராளமான முத்துகள் மற்றும் நகைகள் வைத்து ஜோடிக்கப்பட்டிருக்கும்.

* ஒரு மன்னர், காதில் இரு கறுப்பு முத்துகளை அணிந்திருந்தார். அவற்றின் மதிப்பு, அப்போதே இரண்டு கோடி ரூபாய்.

* மன்னர்கள், வந்த விருந்தினர்களை கவுரவிப்பது கூட பல ரகம்.

ஒரு மன்னர், யானையை அட்டகாசமாய் அலங்கரித்து, அதில் அமர வைத்து, தன் சமஸ்தானத்தை பார்க்க அனுப்புவாராம்.

மற்றொரு மன்னரோ, தான் பயன்படுத்தும் சொகுசு காரிலேயே, விருந்தினரை அனுப்பி வைப்பாராம்.

* ஒரு மன்னர், போலோ விளையாட்டு பிரியர். போட்டிகளிலும் பங்கு கொண்டு ஜெயித்ததும் உண்டு. ஒருமுறை, போட்டியின்போது, தான் அமர்ந்து செல்லும் குதிரை சரியாக ஒத்துழைக்காததால், தோற்றார். உடனே, குதிரையை வெட்டி கொன்று விட்டாராம்.

* ஒரு மன்னர், தான் பயன்படுத்தும், சிவப்பு நிற டாய்லெட்டை கொண்டு வந்து, அரங்கில் போட்டு, அதில் அமர்ந்து தான், புலி, யானைகளின் சண்டையை ரசிப்பாராம்.

- எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.  






      Dinamalar
      Follow us