Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/நம்மிடமே இருக்கு மருந்து - கருணைக்கிழங்கு

நம்மிடமே இருக்கு மருந்து - கருணைக்கிழங்கு

நம்மிடமே இருக்கு மருந்து - கருணைக்கிழங்கு

நம்மிடமே இருக்கு மருந்து - கருணைக்கிழங்கு

PUBLISHED ON : மே 05, 2024


Google News
Latest Tamil News
கருணைக்கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் பி, மாங்கனிஸ், பொட்டாஷியம், இரும்புச்சத்து, ரைபோபிளவின் போன்ற சத்துகள் அதிகம் உள்ளன.

செரிமானக் கோளாறுகளுடன் மலச்சிக்கல், வாயு சேர்த்தல் மற்றும் இதர வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்னைகளையும் தீர்க்கும் திறனுடைய இயற்கை உணவாக உள்ளது.

பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றி, புற்று செல்கள் வளராமல் தடுக்கிறது.

வாரத்தில், மூன்று அல்லது நான்கு முறை சமைத்து சாப்பிட, இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, மாரடைப்பு, இதய ரத்த குழாய்களில் அடைப்பு போன்றவை ஏற்படுவது தடுக்கப்படுகிறது; நீண்ட ஆயுள் தரவல்லது.

உடல் எடை குறையவும், மூலம் நோய் உள்ளோருக்கு சிறந்த இயற்கை மருத்துவ உணவாகவும் விளங்குகிறது.

மலச்சிக்கல், குடல் புண் போன்றவை ஏற்பட்டோர், தினமும் ஒரு வேளை கருணைக்கிழங்கில் செய்த உணவுகளை சாப்பிடலாம்.

மூலம் காரணமாக, குடலில் ஆசன வாயில் ஏற்பட்டிருக்கும் புண்களை விரைவில் ஆற்றுகிறது. நெடுநாள் மலச்சிக்கல் பிரச்னையையும் சரி செய்கிறது.

பெண்களுக்கு, மாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளையும் சரி செய்ய உதவுகிறது.

தொகுப்பு: அமுதா அசோக் ராஜா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us