/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
சொர்ணவாரி பருவத்திற்கு ஏற்ற ஆடுதுறை - 59 ரக நெல்
/
சொர்ணவாரி பருவத்திற்கு ஏற்ற ஆடுதுறை - 59 ரக நெல்
PUBLISHED ON : மே 07, 2025

ஆடுதுறை - 59 ரக நெல் குறித்து திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியை முனைவர் ப.யோகமீனாட்சி கூறியதாவது:
கோவை - 54, கோவை - 55, ஆடுதுறை - 56, ஆடுதுறை - 57 உள்ளிட்ட ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்யலாம். அந்த வரிசையில், ஆடுதுறை - 59 ரக நெல்லை தேர்வு செய்து சாகுபடி செய்யலாம்.
இந்த ரகத்தின் வாயிலாக 115 நாட்களில் நெல் அறுவடை செய்யலாம். குறிப்பாக, நவரை மற்றும் கோடை பருவம் என அழைக்கப்படும் சொர்ணவாரி பருவம் ஆகிய இரு பருவங்களில் சாகுபடி செய்யலாம். இந்த நெல் சாகுபடியில், பாக்டீரியா இலை கருகல், இலை அழுகல், நெல் பழம் நோய் உள்ளிட்ட நோய்களை எதிர்க்கும் தன்மை உடையது.
ஒரு ஏக்கர் நிலத்தில் ஆடுதுறை - 59 ரக நெல் சாகுபடி செய்யும் போது, 80 கிலோ அடங்கிய, 30 நெல் மூட்டைகள் மகசூல் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: முனைவர். ப.யோகமீனாட்சி,
98409 50108.