/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பூட்டிய காருக்குள் தீக்குளித்து பெங்களூரு வாலிபர் தற்கொலை
/
பூட்டிய காருக்குள் தீக்குளித்து பெங்களூரு வாலிபர் தற்கொலை
பூட்டிய காருக்குள் தீக்குளித்து பெங்களூரு வாலிபர் தற்கொலை
பூட்டிய காருக்குள் தீக்குளித்து பெங்களூரு வாலிபர் தற்கொலை
ADDED : ஜூன் 07, 2024 07:16 AM
தென் கிழக்கு டில்லியில் நேற்று காருக்குள் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தென்கிழக்கு டில்லியில், தேவிகா டவரை ஒட்டியுள்ள பஹர்பூர் வணிக வளாகத்தின் முன் நேற்று காலை ஒரு சாம்பல் நிற கார் பாதி தீப்பிடித்து எரிந்த நிலையில் நின்று கொண்டிருந்தது.
இதுகுறித்து காலை 9:40 மணி அளவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காருக்குள் ஒருவர் இறந்து கிடப்பதைப் பார்த்தனர்.
கார் உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் பின்பக்க கண்ணாடியை உடைத்து, கார் கதவுகளை திறந்தனர். இறந்தவருக்கு முகம், தொடை, இரு கைகளிலும் பலத்த தீக்காயங்கள் இருந்தன.
காருக்குள் பெட்ரோல் ஊற்றி எரித்ததற்கான தடயங்கள் இருந்தன. சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றினர்.
அவற்றில் பதிவான காட்சிகளின்படி, நேற்று அதிகாலை 3:30 மணி அளவில் அந்த கார் அங்கு வந்து நிற்பதும், சில நிமிடங்களிலேயே கார் தீப்பிடித்து எரிவதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் பெங்களூரைச் சேர்ந்த துருவ் மஹாஜன், 34, என்பதும், கடன் தொல்லையால் அவதிப்பட்டதும் தெரியவந்தது.
மகாஜன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டு, சம்பவ இடத்திற்கு வந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர
-நமது நிருபர்-