/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பர்னிச்சர் கடையில் தீ 10 பேர் உயிர் தப்பினர்
/
பர்னிச்சர் கடையில் தீ 10 பேர் உயிர் தப்பினர்
ADDED : செப் 27, 2025 05:01 AM
மல்லேஸ்வரம்: பர்னிச்சர் கடையில் தீப்பிடித்து, அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மூன்று வீடுகளுக்கும் தீ பரவியது.
பெங்களூரு, மல்லேஸ்வரத்தின் பைப்லைன் சாலையில் பர்னிச்சர் கடை உள்ளது. நேற்று அதிகாலை 2:30 மணியளவில், இந்த கடையில் தீப்பிடித்தது.
தீ மளமளவென கடை முழுவதும் பரவியது. அப்போது கடைக்குள் இருந்து கரும்புகை வெளியேறுவதை பார்த்த அப்பகுதியினர், உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பர்னிச்சர் கடையில் துாங்கிக் கொண்டிருந்த பணியாட்களை, சத்தம் போட்டு எழுப்பினர். அங்கு படுத்திருந்த 10 பேர் வெளியே ஓடி வந்ததால், அபாயத்தில் இருந்து தப்பினர். பர்னிச்சர் கடையின் பக்கத்தில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் மூன்று வீடுகளுக்கும் தீ பரவியது.
சிறிது நேரத்தில் அங்கு, 13 வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என, தீயணைப்பு படையினர் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவத்தில் ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையாகின.
சம்பவம் நடந்த இடத்தை, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பார்வையிட்டார்.

