Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மஞ்சள் வழித்தடத்தில் விரைவில் 5வது ரயில்?

மஞ்சள் வழித்தடத்தில் விரைவில் 5வது ரயில்?

மஞ்சள் வழித்தடத்தில் விரைவில் 5வது ரயில்?


ADDED : செப் 20, 2025 04:52 AM

Follow on Google

ADDED : செப் 20, 2025 04:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: மெட்ரோ மஞ்சள் வழித்தடத்தில் அடுத்த மாதம் இறுதிக்குள் ஐந்தாவது ரயில் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரின் தெற்கு பகுதிகளை இணைப்பதற்காக, ஆர்.வி., சாலை முதல் பொம்மசந்திரா வரை 19.15 கி.மீ., நீளத்திற்கு மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டது.

இந்த வழித்தடத்தில் ரயில் சேவை கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கப்பட்டது. இதனால், எலக்ட்ரானிக் சிட்டி, பொம்மசந்திரா, ஹேப்பகோடி பகுதியை சேர்ந்த மக்கள் பெரிதும் பயனடைந்தனர்.

ரயில் சேவை துவங்கியபோது, மூன்று ரயில்கள் மட்டுமே இருந்தன. இதனால் 25 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட்டன.

பயணியர் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. கடந்த 10ம் தேதி நான்காவது ரயில் இயக்கப்பட்டது. 19 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட்டன.

அடுத்த ரயில் கூடிய விரைவில் இயக்கத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அக்டோபர் இறுதிக்குள் ஐந்தாவது ரயில் இயக்கப்படும். அப்போது 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிகிறது.

தற்போது, மஞ்சள் வழித்தடத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு, 84,000 பேர் பயணம் செய்கின்றனர்.

ஐந்தாவது ரயில் இயக்கினால், பயணியர் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இந்த வழித்தடத்தில் வருவாய் அதிகரிக்கும் என்று மெட்ரோ நிர்வாகம் நம்புகிறது.

இதற்கிடையில், ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள துாண்களில், விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதிப்பதன் மூலம் ஆண்டுக்கு 80 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட, மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக டெண்டர் கோரியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap