தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஓர் வித்தியாசமான சந்தை

 ஓர் வித்தியாசமான சந்தை

 ஓர் வித்தியாசமான சந்தை


ADDED : மார் 05, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 05:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு பன்னரகட்டா சாலையில், 'ராகி கானா சந்தை' உள்ளது. இது, ஒரு வித்தியாசமான சந்தை. இங்கு, காய்கறி, பழங்கள், மரத்தால் செய்யப்பட்ட விளையாட்டு பொருட்கள், பல வகை உணவுகள், ஆடைகள், துணிப்பை போன்ற விற்கப்படுவதுடன், கலை நிகழ்ச்சிகளும் நடக்கும். இந்த சந்தை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை, 10:00 முதல் மாலை 4:00 மணி வரை நடக்கும். மற்ற நாட்களில் கிடையாது.

இந்த சந்தையானது, குடும்பத்துடன் சுற்றி பார்ப்பதற்கு பொழுதுபோக்காக இருக்கும். இங்கு வாகனங்களை நிறுத்தி கொள்வதற்கு பெரிய அளவிலான கார் பார்க்கிங் வசதி உள்ளது.

முற்றிலும் இயற்கை முறையில் உற்பத்தியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கதர் உடைகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் இல்லாத, மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் குறைந்த விலை முதல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல, வீட்டுக்கு தேவையான காய்கறிகளையும் குறைந்த விலையில் வாங்கி கொள்ளலாம்.

இந்த சந்தைக்கு வருவது மொத்தத்தில் நகரத்தில் இருப்பது போன்று இல்லாமல்; கிராமத்தில் இருப்பது போன்ற நினைப்பை தரும். இது, குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இங்கு அவர்கள் விளையாடுவதற்கான இடங்களும் உள்ளன.

ஞாயிற்றுக்கிழமையை வித்தியாசமாக செலவழிக்க நினைப்பவர்கள், தாராளமாக இங்கு செல்லலாம். இந்த சந்தைக்கு செல்வது, ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும். நகர வாழ்வில் இருந்து சிறு ஓய்வு அளிக்கும். இந்த இடம் பலருக்கும் தெரியாமல் இருப்பதால், அதிக கூட்டம் இல்லாமல் இருக்கிறது. இது, நம் குழந்தைகளின் பாதுகாப்புக்கு மேலும் சிறப்பான விஷயமே.

எனவே, குடும்பத்துடன் சென்று பட்ஜெட்டில் சுற்றிப்பார்ப்பதற்கு, 'ராகி கானா சந்தை' சிறந்த தேர் வாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us