sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

செய்திகள் சில வரிகள்

/

செய்திகள் சில வரிகள்

செய்திகள் சில வரிகள்

செய்திகள் சில வரிகள்


ADDED : ஜூலை 02, 2025 06:58 AM

Google News

ADDED : ஜூலை 02, 2025 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு மாநகராட்சியின் சுகாதார சிறப்பு கமிஷனராக இருந்த சுரால்கர் விகாஸ் கிஷோரை, கடந்த வாரம், அந்த பொறுப்பிலிருந்து விடுவித்து மாநகராட்சி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை திரும்பப் பெறுவதாக கூறி மாநகராட்சி நிர்வாகம் நேற்று முன்தினம் அறிவித்தது. 'சுரால்கர் விகாஸ் கிஷோர் சுகாதாரம் தொடர்பான திட்டங்களை முடிக்க விரும்புவதால், அவரை சுகாதார சிறப்பு கமிஷனர் பதவியில் நீட்டித்துள்ளோம்' எனகூறப்பட்டுள்ளது.

பெங்களூரு, ஜே.பி., நகரில் உள்ள சிந்துார் கல்யாண மண்டபத்தை சுற்றி நடக்கும் கட்டுமான பணிகளை மாநகராட்சி கமிஷனர் மஹேஸ்வர ராவ் பார்வையிட்டார். 'பணிகள் நடக்கும் இடத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதை தவிர்க்க, தடுப்புகளை வைக்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு 'அட்வைஸ்' செய்தார். 'வடிகால்களிலிருந்து அகற்றப்படும் சேற்றை சாலைகளில் கொட்டக்கூடாது' என்றார்.

பெங்களூரு, கோரகுண்டேபாளையாவை சேர்ந்தவர் டிமன் ராஜ், 13. ஏழாம் வகுப்பு மாணவன். இவர், நேற்று முன்தினம் கன்டீரவா மைதானத்தில் நடந்த ஈட்டி எறிதல் பயிற்சியை பார்த்தார். அப்போது, நீரஜ் சோப்ராவுடன் படம் எடுத்தார். அங்கிருந்த ஒருவரிடம் மொபைலை வாங்கி, தன் தாயின் மொபைலுக்கு படத்தை அனுப்பினார். இதையடுத்து, பல மணி நேரம் ஆகியும் சிறுவன் வீட்டிற்கு வரவில்லை. அச்சமடைந்த பெற்றோர் நந்தினி லே - அவுட் போலீசில் புகார் அளித்தனர். சிறுவனை தேடி வருகின்றனர்.

பி.டி.ஏ., எனும் பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் பொது மக்களின் வசதிக்காக, புதிதாக உதவி மையத்தை திறந்துள்ளது. 'ஏதேனும் குறைகள் இருந்தால் 94831 66622 என்ற மொபைலில் புகார் அளிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை புகார்களை அளிக்கலாம்.

ஆந்திர மாநிலம், அன்னமயா மாவட்டத்தை சேர்ந்தவர் பி.ஹேமந்த் குமார், 23. இவர், பெங்களூரில் வசித்தபடி, சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் பைக்குகளை திருடி, ஆந்திராவில் விற்பனை செய்து வந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஹெச்.ஏ.எல்., போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 32 பைக்குகளை மீட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து வந்த மைசூரை சேர்ந்த ரவிகுமார், தமிழகத்தை சேர்ந்த மணி ஆகிய இருவரையும் பெங்களூரு ஆர்.ஆர்., நகர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஏழு கிலோ வெள்ளி பொருட்கள், 58 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 537 கிராம் தங்க நகைகளை மீட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தங்க நகைகள் மீட்பு








      Dinamalar
      Follow us
      Arattai