Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிறையில் நடிகர் தர்ஷன் தற்கொலை முயற்சி? 

 சிறையில் நடிகர் தர்ஷன் தற்கொலை முயற்சி? 

 சிறையில் நடிகர் தர்ஷன் தற்கொலை முயற்சி? 


ADDED : மே 18, 2026 11:19 PM

Follow on Google

ADDED : மே 18, 2026 11:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கொலை வழக்கில் சிறையில் உள்ள, நடிகர் தர்ஷன் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவலை, சிறை நிர்வாகம் மறுத்து உள்ளது.

சித்ரதுர்காவின் ரேணுகாசாமி கொலை வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடிகர் தர்ஷன் அடைக்கப்பட்டு உள்ளார். இன்று அவருக்கு திருமண நாள். மனைவி விஜயலட்சுமி, மகன் வினிஷ் ஆகியோரை நேருக்கு நேர் பார்த்து பேச ஆசைப்படும் அவர், இதற்கு அனுமதி கேட்டு சிறை துறை கண்காணிப்பாளர் அன்சுகுமாருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

'இந்த கடிதத்தின் மீது ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்' என, சிறை துறை டி.ஜி.பி., அலோக் குமார் நேற்று கூறி இருந்தார்.

இந்நிலையில், சிறையில் மன அழுத்தத்தால் தர்ஷன் அவதிப்பட்டதாகவும், மன அழுத்தத்தை தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்றதாகவும், சில சமூக ஊடகங்களில் நேற்று மதியத்திற்கு மேல் தகவல் பரவியது. இது, அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

ஆனால் இதில் துளி கூட உண்மை இல்லை என்று சிறை துறை அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர். 'இதுபோன்ற வதந்தியை நம்பி யாரும் சிறை பக்கம் வரக்கூடாது' என்று, அலோக் குமார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன், மைசூரை சேர்ந்த மனநல டாக்டர் அபிஜித், தர்ஷனுக்கு மனநல சிகிச்சை தேவை. அவர் தற்கொலைக்கு முயற்சிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap