sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

காங்., வேட்பாளருக்கு தேர்தல் பணி ரேணுகாச்சார்யா மீது குற்றச்சாட்டு

/

காங்., வேட்பாளருக்கு தேர்தல் பணி ரேணுகாச்சார்யா மீது குற்றச்சாட்டு

காங்., வேட்பாளருக்கு தேர்தல் பணி ரேணுகாச்சார்யா மீது குற்றச்சாட்டு

காங்., வேட்பாளருக்கு தேர்தல் பணி ரேணுகாச்சார்யா மீது குற்றச்சாட்டு


ADDED : ஜூன் 26, 2025 11:08 PM

Google News

ADDED : ஜூன் 26, 2025 11:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாவணகெரே: “பணம் வாங்கிக் கொண்டு, லோக்சபா தேர்தலில் தாவணகெரே காங்கிரஸ் வேட்பாளர் பிரபா மல்லிகார்ஜுனுக்கு ஆதரவாக பா.ஜ., முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா வேலை செய்தார்,” என, சென்னகிரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசவராஜ் சிவகங்கா, 'பகீர்' கிளப்பி உள்ளார்.

சென்னகிரியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது, தாவணகெரே காங்கிரஸ் தலைவர்கள் சிலரிடம் இருந்து, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா கோடிக்கணக்கில் பணம் வாங்கினார். காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட பிரபா மல்லிகார்ஜுனுக்கு ஆதரவாக வேலை செய்தார். இதற்கான ஆவணம் என்னிடம் உள்ளது. நேரம் வரும்போது வெளியிடுவேன்.

கடந்த 2023 சட்டசபை தேர்தலில் தோற்ற பின், பா.ஜ.,வில் இருந்து விலகி, காங்கிரசில் இணைய ரேணுகாச்சார்யா தயாராக இருந்தார். துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர் மல்லிகார்ஜுன் ஆகியோர் வீட்டு வாசலில் காத்துக் கிடந்தார்.

பா.ஜ., மாநிலத் தலைவராக விஜயேந்திராவை, அக்கட்சி மேலிடம் நியமித்த பின் ரேணுகாச்சார்யா தன் முடிவை மாற்றிக் கொண்டார். நான் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக, ரேணுகாச்சார்யா கூறி உள்ளார். மணல் வியாபாரம் செய்கிறேன். மணல் கடத்தவில்லை. நீங்கள் அமைச்சர், எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது என்னென்ன செய்தீர்கள்; எந்த ஊருக்கு மணல் கடத்தினீர்கள் என்பது எனக்கு தெரியும்.

போலி ஆவணம் கொடுத்து எஸ்.சி., சான்றிதழ் வாங்கிய ரேணுகாச்சார்யாவுக்கு, என்னை பற்றி பேச தகுதி இல்லை. லிங்காயத் சமூகத்தில் இருந்து இளம் தலைவராக நான் வளர்ந்து வருவது அவருக்கு பிடிக்கவில்லை. இவ்வளவு வயிற்றெரிச்சல் இருக்கக் கூடாது.

ஒன்னாளி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சந்தான கவுடா, சாந்தமான மனிதர். ஒன்னாளி எம்.எல்.ஏ.,வாக நான் இருந்திருந்தால், அரசியல் என்னவென்று ரேணுகாச்சார்யாவுக்கு காட்டி இருப்பேன்.

ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம், கேசினோவில் நான் ஈடுபடுவதாகவும், ரேணுகாச்சார்யா கூறி உள்ளார். இது உண்மை என்றால் சிக்கந்துார் சவுடேஸ்வரி, கட்டீல் துர்கா பரமேஸ்வரி, மாவினஹள்ளி மஹாருத்ர சுவாமி கோவிலில் ரேணுகாச்சார்யா சத்தியம் செய்யட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us