sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

பொறுமையாக இருங்கள்! சிவகுமாருக்கு மல்லிகார்ஜுன கார்கே அட்வைஸ்: இருவர் சந்திப்பால் முதல்வர் சித்தராமையா 'திக்... திக்...'

/

பொறுமையாக இருங்கள்! சிவகுமாருக்கு மல்லிகார்ஜுன கார்கே அட்வைஸ்: இருவர் சந்திப்பால் முதல்வர் சித்தராமையா 'திக்... திக்...'

பொறுமையாக இருங்கள்! சிவகுமாருக்கு மல்லிகார்ஜுன கார்கே அட்வைஸ்: இருவர் சந்திப்பால் முதல்வர் சித்தராமையா 'திக்... திக்...'

பொறுமையாக இருங்கள்! சிவகுமாருக்கு மல்லிகார்ஜுன கார்கே அட்வைஸ்: இருவர் சந்திப்பால் முதல்வர் சித்தராமையா 'திக்... திக்...'


ADDED : அக் 18, 2025 11:12 PM

Google News

ADDED : அக் 18, 2025 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் குறித்த சர்ச்சை தீவிரமாகி வருகிறது. இதற்கிடையில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மாநில தலைவரும், துணை முதல்வருமான சிவகுமாரை தனியே சந்தித்துப் பேசினார். பொறுமையாக இருக்கும்படி சிவகுமாரை கார்கே கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சந்திப்பு, முதல்வர் சித்தராமையாவை நடுங்க வைத்துள்ளது. அதிகார பகிர்வு, முதல்வர் மாற்றம், அமைச்சரவை மாற்றியமைப்பு உட்பட, பல்வேறு அரசியல் நகர்வுகள் குறித்து கர்நாடகாவில் சமீப நாட்களாக கடும் விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது.

'நவம்பரில் கர்நாடகாவில் அரசியல் புரட்சி நடக்கும். முதல்வர் மாற்றப்படுவார். புதிய முதல்வர் பதவியேற்பார்' என, சில அமைச்சர்களும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களும் அவ்வப்போது கூறுகின்றனர் .

'காங்கிரஸ் ஆட்சிக் காலம் முடியும் வரை, நானே முதல்வர்' என, சித்தராமையாவும் பல முறை கூறி சோர்ந்துவிட்டார். மேலிடம் எச்சரிக்கை விடுத்தும் யாரும் பொருட்படுத்தவில்லை.

லோக்சபா தேர்தல் முடிந்த நாளில் இருந்தே, முதல்வர் மாற்றம் பேச்சு அடிபடுகிறது. மேலிடம் மண்டையில் குட்டினால், சில நாட்கள் வாயை மூடிக் கொண்டு அமைதியாக இருப் பதும், அதன்பின் ஒவ்வொருவராக வாயை திறப்பதும் வழக்கமாகிவிட்டது.

நவம்பர் நெருங்குவதால், முதல்வர் மாற்றம் குறித்து, சில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும் பேச ஆரம்பித்துள்ளனர். வழக்கம்போல், 'சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலகுவார். சிவகுமார் முதல்வர் பதவியில் அமர்வார். அமைச்சரவை மாற்றியமைக்கப்படும். துறையில் சாதனை செய்யாத அமைச்சர்கள் நீக்கப்படுவர். புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்' என, வாய்க்கு வந்ததை கூறுகின்றனர்.

இதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாத துணை முதல்வர் சிவ குமார், கோவில், கோவிலாக வலம் வருகிறார்.

எனினும் கட்சி கஷ்ட காலத்தில் இருந்தபோது, பக்கபலமாக நின்றவர். மேலிட தலைவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். கர்நாடகாவில் அதிக செல்வாக்குமிக்க தலைவர். இவ்வளவு 'பிளஸ்' இருந்தும், முதல்வராக முடியாத வருத்தத்தை அவரே பல முறை வெளிப்படையாக வெளிப்படுத்தியிருந்தார்.

இதற்கிடையே, பெங்களூரின் சதாசிவநகரில் உள்ள சிவகுமாரின் வீட்டுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சென்றார். இருவரும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இவ்வேளையில் சிவகுமாரிடம் மல்லிகார்ஜுன கார்கே, 'கர்நாடகாவின் அனைத்து நிலவரங்களையும், மேலிடம் கவனிக்கிறது. தேவையான நேரத்தில் சரியான முடிவை எடுக்கும். பீஹார் தேர்தல் முடிந்த பின், அனைவரும் அமர்ந்து பேசலாம். ஒரு தெளிவான முடிவுக்கு வரலாம். கட்சிக்காக உழைத்ததற்கு, தக்க பிரதிபலன் கிடைக்கும்.

'சரியான நேரம் வரும் வரை பொறுமையுடன் இருங்கள். பொறுத்தவன் பூமியாள்வான். மேலிடத்தின் மனதிலும் சில முடிவுகள் உள்ளன. பீஹார் தேர்தலுக்கு பின், அனைத்தும் முடிவாகும்' என கூறியதாக தகவல் வெளியாகிஉள்ளது.

கார்கே, சிவகுமார் திடீர் சந்திப்பு, சித்தராமையாவின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. தன் பதவிக்கு ஆபத்து வருமோ என்ற கலக்கம் ஏற்பட்டுள்ளது. பதவி பறிபோகுமோ என்ற அச்சத்தில் சில அமைச்சர்களும் உள்ளனர்.

மெக்கா வீடியோ பெங்களூரு தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ரிஜ்வான் பாஷா, தற்போது முஸ்லிம்களின் புண்ணிய தலமான மெக்காவுக்கு யாத்திரை சென்றுள்ளார். அங்கு அவர் தங்களின் தலைவர் சிவகுமார், முதல்வராக வேண்டும் என, பிரார்த்தனை செய்துள்ளார். 'சிவகுமாரும், அவரது தம்பி சுரேஷும் கட்சிக்காக இரவு, பகலாக உழைத்தவர்கள். எனவே சிவகுமார் முதல்வராக வேண்டும்' என, வேண்டியதாக மெக்காவில் இருந்தே, வீடியோ வெளியிட்டுள்ளார்.








      Dinamalar
      Follow us