/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மக்களை திசை திருப்ப முயற்சி பா.ஜ.,வின் விஜயேந்திரா கண்டனம்
/
மக்களை திசை திருப்ப முயற்சி பா.ஜ.,வின் விஜயேந்திரா கண்டனம்
மக்களை திசை திருப்ப முயற்சி பா.ஜ.,வின் விஜயேந்திரா கண்டனம்
மக்களை திசை திருப்ப முயற்சி பா.ஜ.,வின் விஜயேந்திரா கண்டனம்
ADDED : ஜூன் 14, 2025 10:59 PM

பெங்களூரு: “சின்னசாமி மைதான கூட்ட நெரிசல் சம்பவ விவகாரத்தில் இருந்து, மக்களை திசை திருப்பும் நோக்கில், ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கையை காங்கிரசார் கையில் எடுத்துள்ளனர்,” என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
வாக்குறுதித் திட்டங்களுக்கு, பணம் புரட்ட முடியாமல் முதல்வர் சித்தராமையா, கையை பிசைகிறார். இவரது சூழ்நிலையை கண்டால், எனக்கு பாவமாக இருக்கிறது. இவரது நிலை யாருக்கும் வரக்கூடாது.
தன் தோல்விகளை மூடி மறைக்க, டில்லியில் அமர்ந்து மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டுகிறார். மத்திய அரசின் கூட்டத்தில் பங்கேற்க, முதல்வருக்கு தர்மசங்கடமா? இவர் மாநில முதல்வரா அல்லது காங்கிரசின் முதல்வரா?
கர்நாடகாவில் மேம்பாட்டுப் பணிகளே நடக்கவில்லை. இதை மூடி மறைக்க, மத்திய அரசின் மீது குற்றஞ்சாட்டுகிறார். கர்நாடகா 100 ரூபாய் கொடுத்தால், வெறும் 13 ரூபாய் மட்டுமே திரும்ப வருகிறது என, பொய் சொல்கிறார்.
ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை குறித்து, எங்களின் போராட்டங்களின் விளைவாக, மூன்று மாதங்களுக்கு முன்பு அரசுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. அப்போது காந்தராஜு அறிக்கையை செயல்படுத்துவதாக கூறினார்.
ஆனால் செயல்படுத்தவில்லை. 'ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கையில், சரியான புள்ளி விபரம் இல்லை. புதிதாக ஆய்வு நடத்த வேண்டும்' என்கிறார்.
சின்னசாமி விளையாட்டு அரங்கில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 11 பேர் பலியாகினர். இந்த விஷயத்தில் இருந்து, மக்களை திசை திருப்பும் நோக்கில், ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கையை காங்கிரசார் கையில் எடுத்துள்ளனர்.
மக்கள் மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதாக காங்கிரசார் கூறுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.