ADDED : ஜூன் 17, 2026 10:14 PM

மல்லே: ஸ்வரம்: ஜூன் 18-: ஹாசனை சேர்ந்தவர்கள் சரத், 25, அனுஷா, 20. இவர்கள் இருவருக்கும், இன்ஸ்டாகிராம் என்ற சமூக ஊடகம் வாயிலாக, க டந்த ஆண்டு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. ஆறு மாதங்களுக்கு முன் இருவரும் பெங்களூரு வந்தனர். மல்லேஸ்வரத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தனர். திருமணம் செய்யாமல் கணவன், மனைவி போல ஒன்றாக வாழ்ந்தனர்.
சில தினங்களாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த, 15ம் தேதி இரவு ஏற்பட்ட தகராறில் அனுஷாவை கழுத்தை நெரித்து, சரத் கொலை செய்து, வீட்டை பூட்டி தப்பினார். நேற்று முன்தினம் தனக்கு தெரிந்த வக்கீல் ஒருவரை தொடர்பு கொண்டு, அனுஷாவை கொன்றது பற்றி சரத் கூறினார்.
அதிர்ச்சி அடைந்த வக்கீல், சேஷாத்ரிபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு சென்ற போலீசார், கதவை உடைத்து, அனுஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தலைமறைவாக இருந்த சரத்தை, ஹாசனில் நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது.
