/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
8 சிறுமியருக்கு பாலியல் தொல்லை பேராசிரியர் மீதான வழக்கு உறுதி
/
8 சிறுமியருக்கு பாலியல் தொல்லை பேராசிரியர் மீதான வழக்கு உறுதி
8 சிறுமியருக்கு பாலியல் தொல்லை பேராசிரியர் மீதான வழக்கு உறுதி
8 சிறுமியருக்கு பாலியல் தொல்லை பேராசிரியர் மீதான வழக்கு உறுதி
ADDED : ஜூன் 12, 2025 11:05 PM
பெங்களூரு: மகளின் பிறந்த நாளுக்கு வந்த எட்டு சிறுமியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தன் மீது பதிவு செய்யப்பட்ட, 'போக்சோ' வழக்கை ரத்து செய்ய கோரிய உதவி பேராசிரியர் மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பெங்களூரு, ஐ.ஐ.எஸ்.சி., எனும் இந்திய அறிவியல் மையத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர், 2018ல் தன் மகளின் 9வது பிறந்த நாள் விழாவை கொண்டாடினார். இவ்விழாவுக்கு மகளின் தோழிகள், அக்கம் பக்கத்து குழந்தைகள் வந்திருந்தனர்.
கொண்டாட்டத்தின்போது குழந்தைகள் அனைவரும், 'ஹன்டேட் ஹவுஸ்' விளையாடினர். அப்போது இருட்டு அறையில் தோழிகள் மறைந்து கொண்டனர்.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட உதவி பேராசிரியர், மகளின் தோழிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதன்பின் வீட்டுக்கு சென்ற ஒரு குழந்தை, தன் பெற்றோரிடம் தெரிவித்தார்.
அதிர்ச்சி அடைந்த அவர்கள், பேராசிரியரின் வீட்டுக்கு சென்று திட்டினர். மறுநாள் காலை, போலீசில் புகார் அளித்தனர். 'போக்சோ' வழக்குப் பதிவு செய்த போலீசார், பேராசிரியரை கைது செய்தனர். பின், ஜாமினில் வெளியே வந்தார்.
விசாரணை நடத்திய போலீசார், 'போக்சோ' நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், உதவி பேராசிரியர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நேற்று முன்தினம் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளதாவது:
போலீசில் புகார் அளித்தவரின் மகள் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மனுதாரர், ஜன்னல் திரைக்கு பின்னால் நின்றுள்ளார். புகார்தாரர் மகளின் இடுப்பில் கை வைத்தும், அந்தரங்க பகுதி மீதுள்ள ஆடையில் கை வைத்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
இதேபோன்று மற்ற குழந்தைகளிடமும் அவர் நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகளில் முக்கியமான ஒரு வாக்குமூலமே போதும் என்று சட்டம் சொல்கிறது.
எனவே, அவரின் மனு தள்ளுபடி செய்யப்படுவதுடன், விசாரணை நீதிமன்றம் இவ்வழக்கை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.