தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ செக் போஸ்ட்

 செக் போஸ்ட்

 செக் போஸ்ட்


ADDED : ஏப் 08, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 04:25 AM


Favourite on Google
அ நிறம் | அளவு

சிலை திறப்பாங்களா?

கோ ல்டு சிட்டிக்கு முதல் நகரமே ஆ.பேட்டை என வரலாற்று நுாலாசிரியர் எழுதி வச்சிருக்காங்க. அந்த முதல் நகரின் பேரு மட்டுமே, பஸ் நிலையத்தில் பாக்க வெச்சிருக்காங்க. இப்பகுதி ஜனங்கள, பஸ் நிலைய பெயர் பலகை தான் வரவேற்கிறதே தவிர ஒரு பஸ் கூட வந்து போறது இல்லையே. திறந்த வெளி மெக்கானிக் ஒர்க் ஷாப்பா மாறிப் போச்சு. இதுக்கு மத்தியில் ஒரு திறக்கப்படாத சிமென்ட் சிலை 30 வருஷமா மூடி கிடக்குது. அது மாஜி பி.எம்., உருவ பொம்மைன்னு சொல்றாங்க. ஆளும் ஆட்சி இருக்கும்போதே அந்த பொம்மையை கண்டுக்கல. அப்படின்னா திறக்க படாத இந்த சிலையும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க போகுதோ.

இலவச நோய் சப்ளை

ஆ .பேட்டை மார்க்கெட்டும் கூட முனிசி.,க்கு சொந்தமானது தான். ஆனால், அந்த மார்க்கெட் வளர்ச்சிக்கு அதிகாரிகள் கவனம் செலுத்தாமல் இருக்காங்க. இங்குள்ள கடைகளின் கட்டடங்கள் சிதைந்து குட்டிச் சுவராக இருக்கிறது. வியாபாரமும் சரியாக நடக்கவில்லை. மார்க்கெட்டுக்குள் நுழையவே பலர் அச்சப்படுறாங்க. இங்கு இறைச்சிக்கடை, பிரியாணி விற்பனை மட்டுமே பேமஸ். மற்ற பொருட்கள் வாங்க ரா.பேட்டைக்குத்தான் செல்றாங்க.

இங்குள்ள கழிப்பறை பக்கம் சென்றாலே இல்லாத நோய்கள் எல்லாம் எளிதாக வாங்கி செல்லலாம். இது பற்றி முனிசி., சுகாதாரத் துறைக்கு தெரியுமா. தெரியாதா. அப்படி ஒரு துறை, முனிசியில் இருக்குதா; இல்லையா.

முனிசி., பெரிய ஆபீசரு இதுவரையில் இந்த மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்து பார்த்தாரா; பார்த்து என்ன ஆக் ஷன் எடுத்தாரு. மார்க்கெட்டுக்கு எப்போது விமோச்சனம் பொறக்கும்.

வீட்டு மனையா மாறுமோ?

ரா .பேட்டை சிட்டிக்குள் புல் மார்க்கெட்டை இடித்து தரைமட்டம் ஆக்கி, யாரோ ஒருவர் சொந்தம் ஆக்க பிளான் போட்டாங்க. அது ஈடேறல; அதை சமமாக்கிட்டாங்க. அந்த காலி இடத்தில் சட்டப் பிதா ஜெயந்தியை கொண்டாடுற வேளையில், வீடே இல்லாத 100 பேருக்கு மனை தருவாங்களா அல்லது யூத் பசங்களுக்காக விளையாட்டு மைதானமாக மாற்றுவாங்களா. இதுதான் நகரில் ரீல் ஓடிக் கொண்டிருக்கிறது. மந்திரின்னா, மந்திரி வாரிசுன்னா அரசு சொத்தை தன்னிச்சையா சூறையாடலாமா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us