sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்


சினிமா



/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ செக் போஸ்ட்

 செக் போஸ்ட்

 செக் போஸ்ட்


ADDED : ஏப் 15, 2026 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 01:44 AM


Favourite on Google
அ நிறம் | அளவு

ஏன் இந்த தடுமாற்றம்?

உ லகெங்கிலும் கொரோனா பலரையும் நடமாட விடாமல் முடக்கியது. எல்லா ரயில்களும் உறங்கின. கொரோனா மறைந்த பின், ரயில்கள் வழக்கம் போல இயங்க தொடங்கின. ஆனால், சிலிக்கான் சிட்டியிலிருந்து பகல் 2.50 மணிக்கு கோல்டு சிட்டிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்த ரயிலை, ஒயிட் பீல்ட் - கோல்ட் பீல்ட் என மாற்றி இயக்க வைத்தாங்க. தற்காலிகமாக இருக்கும் என நினைத்த பயணியருக்கு ஏமாற்றம் தான் மிச்சம். மீண்டும் சிலிகான் சிட்டி வரை இயக்க மறந்துட்டாங்க.

சம்மர் காலத்தில், எல்லா ரயில்களிலும் கூட்ட நெரிசல். பிருந்தாவனம் ரயிலின் கூட்டத்தை கட்டுப்படுத்த சும்மா 4 நாள் மட்டுமே கோல்டு சிலிக்கான் சிட்டியில் இருந்து இயக்கி, 'டுவிஸ்ட்' கொடுத்தாங்க. இதுவே நிரந்தரமாக இருக்கும்னு நெனச்ச பயணியரை, ரயில்வேக்காரங்க ஏமாத்திட்டாங்க.

நாட்டில் எத்தனையோ புது புது ரயில்கள் எல்லாம் இயங்கும்போது, செயலில் இருந்த ரயிலை மட்டும் இயக்க விடாமல் தடுத்துட்டாங் களே. செங்கோட்டைக்காரர், அசெம்பிளிக்காரர், ஜன பிரதிநிதிகள் சொல்லியும், ரயில்வே மந்திரி வரை கெஞ்சியும் அந்த ரயிலை இயக்காமல் எதனால் தடுக்குறாங்களோ.

வெள்ளி கிரீடம் எங்கே?

ஓ யாமல் மழை பெய்தாலும் எங்குமே மழைநீர் தேங்காமல், சேறு சகதியா மாறாமல், இங்கிலீஷ் கார துரைங்க ஒரு மைதானத்தை ஏற்படுத்தினாங்க. நுாற்றாண்டு ஓல்டான இந்த மைதானத்தை பாழாக்கி முட்புதர், புற்கள், மரங்கள், செடி, கொடிகள் வளர வைத்து பூட்டி வெச்சிருக்காங்க. இதை சீரமைக்க கோரியும் பிரயோஜனம் இல்லை. அந்த மைதானத்தை, ஸ்டேடியம் ஆக்க தொழிலாளர்கள் நிதியெல்லாம் கொடுத்தாங்க. அதில் தேசிய கால்பந்து போட்டிகளையும் நடத்தினாங்க. அதுக்கு சட்டப் பிதா பெயரையும் சூட்டினாங்க. ஆனா, இப்போ பாழடைந்து மூடியே கிடக்குதே.

சட்டப் பிதா பெயரில் ரா.பேட்டை பூங்காவில் கட்டடம் கட்டடப்பட்டது. அதையும் திறக்க விடாமல் சட்ட சிக்கலில் கொண்டுப் போய் விட்டுட்டாங்க.

ஒரே நகரத்தில் 20 சிலைகள் நிறுவி இருக்காங்க. இதில் ஓரிரு சிலைகள் மட்டுமே மெட்டல் சிலை. முனிசி., ஆபீஸ் வளாகத்தில் உள்ள அவரோட சிமென்ட் சிலை விரிசல் காணப் படுது. இதனை மெட்டல் சிலையா மாற்ற முனிசி.,யில் நிதியும் ஒதுக்கினாங்க. அந்த தொகை என்ன ஆனதோ.

பூங்காவில் உள்ள சிலைக்காகவே செய்த 'வெள்ளி கிரீடம்' யார் வீட்டு கஜானாவில் உறங்குதோ. இவ்வாண்டு ஜெயந்தி விழாவிலாவது சிலையின் தலையில் சூடுவாங்களா. மண்வாரி எந்திர தொழிற்சாலையில் சட்டப் பிதா பேரில் சுற்றுச்சூழல் பூங்காவை 10 ஏக்கரில் ஏற்படுத்தினாங்க. அங்கும் தொழிற்பேட்டை அமைக்க போறாங்களாம். அப்படின்னா சோதனை மேல் சோதனை தானா.

ஏரி நிலம் காணலையே!

கோ ல்டு சிட்டியில் ஏரிகள் எண்ணிக்கை 325. இதில், ஆபீசர்கள் 200 ஏரிகளை சர்வே நடத்தி முடித்தாங்க. அதிலும் ஏகப்பட்ட குளறுபடி இருப்பதால் 46 ஏரிகளை மறு சர்வே செய்ய வேணுமாம். ஆறு மாத கெடு கொடுத்தும் 200 ஏரிகளின் சர்வே இன்னும் முழுசா முடியல. இதில் பல லேண்ட் மாபியா பிஸ்தாக்கள், அரசியல் செல்வாக்கு உள்ளவங்க சிலர், பினாமி பேரில் நில பதிவு செய்திருக்கிற விபரங்களை கண்டுப்புடிச்சிட்டாங்களாம். ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசுடமை ஆக்கினதா ஒரு தகவலும் இல்லையாமே.

முன்பு ஏரி நீரை தான் திருடினாங்கன்னு ஜனங்க பேசினாங்க. இப்போ ஏரியையே திருடிட்டாங்களான்னு ஊரே பேசுது. ஏரிகளின் சர்வே நிலவரம் பற்றி சந்தி சிரிக்குது. இன்னும் மீதமுள்ள 125 ஏரியில் என்னென்ன தகவல்கள் சிக்க போகுதோ.

லோக் ஆயுக்தா ஆபீசர்களுக்கு இப்போ தான் சரியான வேலை வந்திருக்கு. இவங்க யாருக்கும், எதுக்கும் பணியாமல் நடைபோடுவாங்கன்னு நம்பிக்கை இருக்குது.

மாயமான பிச்சைக்கார நிதி

மா நிலம் முழுவதும் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையம் ஏற்படுத்தி பராமரிப்பு செய்றாங்க. அதற்கென பட்ஜெட்டில் நிதியும் ஒதுக்குறாங்க.

கோல்டு சிட்டியிலும் முனிசி.,யில் ஆ.பேட்டை சமுதாய பவனை இந்த திட்டத்துக்கு பயன்படுத்தினாங்க. பிச்சைக்காரர்கள் யாருமே ரயில் நிலையம், பஸ் நிலையம், பூங்காக்கள், கடைகளின் தாழ்வாரங்களில் படுக்கவோ, பிச்சை எடுக்கவோ கூடாதென ஆக் ஷன் எடுத்தாங்க. ஆனால், அந்த மறுவாழ்வு மையம் பல மாதங்களாக பூட்டியே கிடக்குது. இதனை பராமரிக்கும் பொறுப்பை ஏற்ற தொண்டு நிறுவனத்துக்கு ஒப்பந்தப்படி நிதி வழங்காததால், இந்த வேலையே வேணாம்னு கையை கழுவிட்டாங்களாம். பிச்சைக்கார நிதியிலும் மோசடி நடந்திடுச்சா; ஆபீசர்களும், வெள்ளாடைகளும் பங்கு போட்டுக்கிட் டாங்களா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us