/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு கட்டுப்பாடு காங்., ராஜண்ணா எதிர்ப்பு
/
ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு கட்டுப்பாடு காங்., ராஜண்ணா எதிர்ப்பு
ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு கட்டுப்பாடு காங்., ராஜண்ணா எதிர்ப்பு
ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு கட்டுப்பாடு காங்., ராஜண்ணா எதிர்ப்பு
ADDED : அக் 18, 2025 11:07 PM

துமகூரு: ''பொது இடங்களில், சங்கங்கள், அமைப்புகள் நிகழ்ச்சி நடத்த அனுமதி பெற வேண்டும் என்பது, செயல்படுத்த முடியாத சட்டமாகும். இதை யாராவது பின்பற்றுவார்களா?'' என, காங்., முன்னாள் அமைச்சர் ராஜண்ணா கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து, துமகூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஆர்.எஸ்.எஸ்.,க்கு கட்டுப்பாடு விதிக்க முடியுமா? சங்கங்கள், அமைப்புகள் பொது இடங்களில், நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி பெற வேண்டும் என, விதிமுறை வகுத்தால், யாராவது கேட்பார்களா?
ஆர்.எஸ்.எஸ்., உட்பட எந்த அமைப்புகளும், சங்கங்களும் அனைத்து நிகழ்ச்சிகளுக்காக அனுமதி பெற முடியாது. அப்படி அனுமதி பெற்றே ஆக வேண்டும் என்றால், தொழுகை நடத்தவும் அனுமதி பெற வேண்டும்.
தற்போது சாலைகளில், பொது இடங்களில் தொழுகை நடத்துகின்றனர். இதற்கு அனுமதி பெற வேண்டும் என்றால் கேட்பார்களா? அனைத்து இடங்களில் தொழுகை நடத்த வேண்டும் என, அனுமதி கேட்டால் அனுமதிக்க முடியுமா?
எந்த சட்டத்தை அமல்படுத்த முடியுமோ, அதை மட்டும் அமல்படுத்த வேண்டும். அமல்படுத்த முடியாத சட்டங்களை கொண்டு வந்தால், அவை புத்தகத்தில் மட்டுமே இருக்கும்; அமலுக்கு வராது.
பொது இடங்களில் சங்கங்கள், அமைப்புகள் நிகழ்ச்சி நடத்த, முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்பதும், செயல்படுத்த முடியாத விதிமுறைதான்.
இவ்வாறு அவர் கூறினார்.

