sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ஆபாசமாக நடந்து கொண்ட தம்பதிக்கு ரூ 1500 அபராதம்

/

ஆபாசமாக நடந்து கொண்ட தம்பதிக்கு ரூ 1500 அபராதம்

ஆபாசமாக நடந்து கொண்ட தம்பதிக்கு ரூ 1500 அபராதம்

ஆபாசமாக நடந்து கொண்ட தம்பதிக்கு ரூ 1500 அபராதம்


ADDED : மே 28, 2025 10:58 PM

Google News

ADDED : மே 28, 2025 10:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொப்பால்: ஓடும் காரில், 'சன் ரூபை' திறந்து எழுந்து நின்று முத்தமிட்டு ஆபாசமாக நடந்து கொண்ட தம்பதிக்கு போலீசார் 1,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

பெங்களூரின், டிரினிட்டி சதுக்கம் அருகில், நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் இளம் தம்பதி காரில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் காரின் சன் ரூபை திறந்து, எழுந்து நின்று முத்தமிட்டு, ஆபாசமாக நடந்து கொண்டனர். இதை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்தனர்.

இதை பின்னால் வாகனத்தில் வந்தவர்கள், தங்கள் மொபைல் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். போலீஸ் துறைக்கும் இதனை அனுப்பி, பொது இடத்தில் தவறாக நடந்து கொண்ட தம்பதி மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.

இந்த வீடியோ வேகமாக பரவியது. பொது மக்களும் தம்பதியை கண்டித்தனர். இதை கவனித்த ஹலசூர் போக்குவரத்து போலீசார், காரின் பதிவு எண்ணை வைத்து, தம்பதியை கண்டுபிடித்தனர். அபாயமான முறையில் கார் ஓட்டியதுடன், பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்ட அவர்களுக்கு 1,500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

'வாகனம் ஓட்டும் போது, போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும். இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்து அவர்களை அனுப்பினர்.






      Dinamalar
      Follow us