தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நொறுக்குகள்

 நொறுக்குகள்

 நொறுக்குகள்


ADDED : மே 09, 2026 02:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2026 02:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -: l அப்பளத்தின் மேல் சிறிது மிளகாய் பொடி துாவி வைத்தால் எறும்புகள் அண்டாது

l பனீர் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க வினிகர் தெளித்து பிளாஸ்டிக் கவரில் போட்டு வைக்கலாம்

l எலுமிச்சை பழச் சாற்றில் சிறிது இஞ்சி சாறு சேர்த்தால் சுவை அருமையாக இருக்கும்

l கறிவேப்பிலை எளிதில் காயாமல் இருக்க, அதை ஒரு அலுமினிய பாத்திரத்தில் போட்டு வைக்கலாம்

l தயிருக்கு உறை ஊற்றும் பாலில் தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சினால் கெட்டியான தயிர் கிடைக்கும்

l குழம்பு வைக்கும் போது, வெண்டைக்காயின் காம்பு, தலைப்பகுதிகளை அகற்றி விட்டு சமைத்தால் குழம்பின் சுவை கூடும்

l வெங்காயத்தை 15 நிமிடங்கள் தண்ணீரில் போட்டு வைத்த பின் நறுக்கினால் கண்ணில் எரிச்சல் ஏற்படாது

l சப்பாத்தி மாவு பிசையும் போது, சிறிதளவு காய்ச்சிய பால் சேர்த்து பிசைந்தால், சப்பாத்தி நீண்ட நேரம் மென்மையாக இருக்கும்

l பச்சை மிளகாயை காம்பு நீக்கி விட்டு பிளாஸ்டிக் கவரில் போடவும். கவரில் சிறிது துளையிட்டு, பிரிட்ஜில் வைத்தால், ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us