Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காட்டு யானை தாக்கியதில் பெண் தொழிலாளி பலி

 காட்டு யானை தாக்கியதில் பெண் தொழிலாளி பலி

 காட்டு யானை தாக்கியதில் பெண் தொழிலாளி பலி


ADDED : பிப் 23, 2026 04:46 AM

Follow on Google

ADDED : பிப் 23, 2026 04:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்கமகளூரு: காட்டு யானை தாக்கியதில் காபி தோட்டத்தில் பணிபுரிந்த கூலி பெண் தொழிலாளி உயிரிழந்தார்.

சிக்கமகளூரு மாவட்டம், என்.ஆர்., புரா தாலுகா ஹுனசேஹள்ளி கிராமத்தில் உள்ள காபி தோட்டத்தில் கூலி தொழிலாளராக பணிபுரிந்தவர் போரம்மா, 33. இவர், நேற்று தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த காட்டு யானை போரம்மாவை தாக்கியது. இதில், அவர் உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியினர், தேசிய நெடுஞ்சாலையில் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உடனடியாக சம்பவ இடத்திற்கு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். போலீசார் பேச்சு நடத்தினர்.

மேலும், இதே பகுதியில் கடந்த வாரம் யல்லப்பா, 45, என்பவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார். கடந்த ஒரு வாரத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்தனர்.

இதனிடையே, அப்பெண் உயிரிழந்த இடத்திற்கு வந்த வனத்துறையினர் காட்டு யானையை தேடத்துவங்கினர். 100க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் களத்தில் இறங்கினர். கும்கி யானைகளும் களத்தில் இறங்கின.

கடைசியாக, மயக்க ஊசி செலுத்தி காட்டு யானை பிடிக்கப்பட்டது. கும்கி யானை உதவியுடன் காட்டு யானையை லாரியில் ஏற்றி வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap