Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ போக்குவரத்து நெரிசலுக்கு 'குட் பை'

போக்குவரத்து நெரிசலுக்கு 'குட் பை'

போக்குவரத்து நெரிசலுக்கு 'குட் பை'


ADDED : செப் 30, 2025 05:45 AM

Follow on Google

ADDED : செப் 30, 2025 05:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ மெரிக்கா, இங்கி லாந்து உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த நாடுகளில் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் குறைவதற்கு முக்கிய காரணமே போக்குவரத்து மேலாண்மை பற்றிய தொலைநோக்கு சிந்தனை, ஆய்வுகளே என கூறலாம். போக்குவரத்து மேலாண்மையில் சிறந்து விளங்கும் டேட்டா டிராபிக் கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அரவிந்த், பெங்களூரில் இந்நிறுவனத் தை தொடங்கி உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

போக்குவரத்து என்பது அனைத்து வளர்ச்சிக்கும் மையப்புள்ளி ஆகும். ஒரு நாட்டின் போக்குவரத்து வசதிகள் எளிதான முறையில் இருந்தால் மட்டுமே, பொது மக்களின் அன்றாட செயல்பாடுகள் எளிதாக நடக்கும். வளர்ச்சி அடைந்த நாடுகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தீவிர மாக ஆய்வு நடத்தப்படுகிறது.

இதற்காக, பிரதான சாலைகளில் வரும் வாகனங்களின் எண்ணிக்கை, சிக்னல்களின் எண்ணிக்கை குறித்து தீவிரமாக கணக்கிடப்படும். இது புள்ளி விபரங்களாக சேகரிக்கப்படும். இதை வைத்து மேம்பாலம், சுரங்கப்பாதை அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். இதே போல பெங்களூரிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க தீர்வுகளை வழங்க தயாராக உள்ளோம்.

பெங்களூரின் வளர்ச்சி, வாகனங்களின் எண்ணிக்கையை கவனத்தில் கொண்டு, தொலைநோக்கு திட்டத்துடன் பல்வேறு ஆய்வு நடத்தி உள்ளோம். இதற்கு, அரசு அதிகாரிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap