Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஆரோக்கியம் காக்கும் ஆப்பிள் பாயசம்

 ஆரோக்கியம் காக்கும் ஆப்பிள் பாயசம்

 ஆரோக்கியம் காக்கும் ஆப்பிள் பாயசம்


ADDED : நவ 15, 2025 08:05 AM

Follow on Google

ADDED : நவ 15, 2025 08:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்டிகை நாட்களில் பெரும்பாலான இனிப்புகளில் முதன்மையாக இருப்பது பாயசம் தான். இதில் பல வகை பாயசம் உள்ளன. இந்த வாரம், ஆப்பிள் பாயசம் செய்வதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

 ஆப்பிள் - 5

 ஏலக்காய் - 6

 முந்திரி - 10

 உலர் திராட்சை - 10

 நெய் - சிறிதளவு

 பேரீச்சம்பழம் - 5

 பாசிபருப்பு - 1 டம்ளர்

 வெல்லம் - அரை கிலோ

 தேங்காய் பால் - 1 டம்ளர்

செய்முறை:

ஆப்பிள் பாயசம் செய்ய, ஆப்பிளில் உள்ள விதைகளையும், தோல்களையும் நீக்கவும்.

ஆப்பிளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்பை வேக வைக்கவும். ஓரளவிற்கு வெந்தவுடன் வெல்லத்தை பொடியாக்கி உடன் சேர்த்து கொள்ள வேண்டும்.

10 நிமிடங்களுக்கு பின், தயார் செய்து வைத்துள்ள ஒரு டம்ளர் தேங்காய் பாலை சேர்த்து, கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

பருப்பு நன்கு வெந்தவுடன் இதனுடன் ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சையை உடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக ஐந்து நிமிடங்களுக்கு பின் ஆப்பிள், பேரீச்சம் பழங்களை சேர்த்தால், ஆரோக்கியம் நிறைந்த ஆப்பிள் பாயசம் தயாராகிவிடும்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap