/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எஸ்.டி., பிரிவில் குருபா சமூகம் வால்மீகி சமுதாயம் கடும் எதிர்ப்பு
/
எஸ்.டி., பிரிவில் குருபா சமூகம் வால்மீகி சமுதாயம் கடும் எதிர்ப்பு
எஸ்.டி., பிரிவில் குருபா சமூகம் வால்மீகி சமுதாயம் கடும் எதிர்ப்பு
எஸ்.டி., பிரிவில் குருபா சமூகம் வால்மீகி சமுதாயம் கடும் எதிர்ப்பு
ADDED : செப் 18, 2025 11:10 PM
பல்லாரி: குருபா சமூகத்தை எஸ்.டி., பிரிவில் சேர்ப்பதற்கு, வால்மீகி சமூகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
கர்நாடகாவில் மூன்றாவது பெரிய சமூகமாக உள்ள குருபாவை, எஸ்.டி., பிரிவில் சேர்க்க, அச்சமூகத்தை சேர்ந்த முதல்வர் சித்தராமையா முயற்சித்து வருகிறார். இதற்கு பா.ஜ.,விடம் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது. முதல்வரின் முயற்சிக்கு, அகண்ட கர்நாடகா வால்மீகி நாயக் சமூகமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இச்சமூகத்தின் தலைவர் திம்மப்பா, பல்லாரியில் நேற்று அளித்த பேட்டி:
காங்கிரசில் உள்ள பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களை அரசியல்ரீதியாக ஒடுக்கும் முயற்சியில் முதல்வர் சித்தராமையா ஈடுபடுகிறார். நாகேந்திரா, ராஜண்ணாவிடம் இருந்து அமைச்சர் பதவியை பறித்து பலிகடா ஆக்கினர்.
சிவகுமாரை முதல்வர் ஆகவிடாமல் உங்களை பதவியில் அமர வைக்கிறோம் என்று சதீஷ் ஜார்கிஹோளியிடம், முதல்வர் தரப்பில் சிலர் கூறி உள்ளனர்.
எஸ்.டி., சமூகத்திற்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு கொடுங்கள். பின், குருபா சமூகத்தை சேர்த்து கொள்ளுங்கள். குருபா சமூகம் கல்வி, பொருளாதாரம், அரசியல்ரீதியாக முன்னேறி உள்ளது. எஸ்.டி., சமூகம் இப்போது தான் முன்னேறி வருகிறது. சித்தராமையாவின் முடிவை காங்கிரசில் உள்ள வால்மீகி சமூக எம்.எல்.ஏ.,க்கள் எதிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.