/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மருத்துவ மாணவி ஏரியில் சடலமாக மீட்பு
/
மருத்துவ மாணவி ஏரியில் சடலமாக மீட்பு
ADDED : ஜூன் 13, 2025 11:18 PM

ராம்நகர்: மருத்துவ மாணவி ஒருவர், சிங்கராஜிபுரா ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார்.
மாண்டியா மாவட்டம், மத்துார் தாலுகாவின், ஆம்பரஹள்ளி கிராமத்தில் வசித்தவர் மஹாலட்சுமி, 20. இவர் ராம்நகரில் உள்ள, இன்ஸ்டியூட் ஆப் பாரா மெடிகல் கல்லுாரியில் படித்து வந்தார். நேற்று முன் தினம் காலை, வழக்கம் போன்று கல்லுாரிக்கு சென்ற இவர், மதியம் திடீரென காணாமல் போனார்.
வீட்டுக்கும் செல்லவில்லை. கலக்கம் அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடினர். இது குறித்து அக்கூர் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தனர். போலீசார் தேடியபோது, சென்னப்பட்டணா தாலுகாவின், சிங்கராஜிபுரா கிராமத்தின் ஏரிக்கரையில் மஹாலட்சுமியின் அடையாள அட்டையும், பையும் கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே போலீசார், தீயணைப்பு படையினர் ஏரியில் தேடினர். நேற்று அதிகாலை மாணவியின் உடல் மீட்கப்பட்டது. இதை பரிசோதனைக்கு அனுப்பினர். மாணவி ஏரியில் குதித்து, தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். அக்கூர் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.