/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பி.எம்.டி.சி., பஸ்களில் மொபைல் போன் திருட்டு
/
பி.எம்.டி.சி., பஸ்களில் மொபைல் போன் திருட்டு
ADDED : ஜூன் 02, 2025 10:21 PM
பெங்களூரு : பி.எம்.டி.சி., பஸ்களில் மொபைல் போன் திருட்டு அதிகரித்துள்ளது. எச்சரிக்கையாக இருக்கும்படி பயணியரை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பி.எம்.டி.சி., பஸ்களில் பல நேரங்களில், பயணியர் கூட்டம் அதிகம் இருக்கும். இதை பயன்படுத்தி மொபைல் போன் திருடுவது அதிகரிக்கிறது. பயணியர் கூட்டம் இல்லாத நேரத்திலும், கைவரிசையை காட்டுகின்றனர்.
பி,எம்.டி.சி., பஸ்களில், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. சில நேரங்களில் பயணியர் மற்றும் ஓட்டுநர், நடத்துநர் இடையே தகராறு நடக்கிறது.
அடிதடி சம்பவங்களும் நடக்கின்றன. எனவே பயணியரின் பாதுகாப்புக்காக, ஓட்டுநர், நடத்துநர்களின் செயல்பாட்டை தெரிந்து கொள்ள பி.எம்.டி.சி., பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
நேற்று காலை பி.எம்.டி.சி., பஸ் ஒன்றில், பயணியர் முன்னிலையில் மொபைல் போனை, மற்றொரு பயணி திருடிய காட்சி, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கூட்டம் அதிகம் இல்லாத போதே, திருட்டு நடந்துள்ளது.
எனவே பி.எம்.டி.சி., பஸ்களில் பயணம் செய்யும்போது, தங்களின் பர்ஸ் தங்கநகை, மொபைல் போன்களை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.