/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நந்தி மலையில் 3 நாட்கள் சுற்றுலா பயணியருக்கு தடை
/
நந்தி மலையில் 3 நாட்கள் சுற்றுலா பயணியருக்கு தடை
ADDED : ஜூன் 11, 2025 02:49 AM

சிக்கபல்லாபூர் : அமைச்சரவை கூட்டம் நடப்பதால், ஜூன் 16 முதல் 20ம் தேதி வரை, நந்தி மலையில் சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சிக்கபல்லாபூர் மாவட்ட கலெக்டர் ரவீந்திரா நேற்று அளித்த பேட்டி:
சிக்கபல்லாபூரின், நந்தி மலையில் ஜூன் 19ம் தேதி, அமைச்சரவை கூட்டம் நடக்கவுள்ளது. இதில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்பர். ஊடகத்தினரும் வருகை தருவர்.
நந்தி மலைக்கு செல்லவும், வரவும் ஒரே ஒரு சாலை உள்ளது. எனவே வாகன நெருக்கடி அதிகம் இருக்கும். நந்தி மலையில் குறுகலான திருப்புமுனைகள் உள்ளன. இத்தகைய சாலைகளில், போக்குவரத்து நெருக்கடியை சமாளிப்பது கஷ்டம்.
அமைச்சரவை நடப்பதால், முதல்வர், அமைச்சர்கள் உட்பட அனைவரின் கார்களும் மலைக்கு வரும். இதே நேரத்தில் சுற்றுலா பயணியரும் வந்தால் பிரச்னை ஏற்படும்.
இதைத் தவிர்க்கும் நோக்கில், ஜூன் 17ம் தேதி முதல், 19ம் தேதி வரை நந்தி மலையில், சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் மலையில் உள்ள விடுதிகளின் அறைகளை, முன் பதிவு செய்ய வேண்டாம் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.