Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்

 ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்

 ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்


ADDED : மார் 01, 2026 05:20 AM

Follow on Google

ADDED : மார் 01, 2026 05:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகலுார்: ரவுடி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு ரவுடி, போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றார். அவரை போலீசார் காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

பெங்களூரு தனிசந்திரா அருகே, ரவுடி பவன் குமார், 28, என்பவர், கடந்த மாதம், 25ம் தேதி மர்மநபர்கள் ஆறு பேரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலையின் முக்கிய குற்றவாளி ரவுடி ரஞ்சித் என, போலீசார் அடையாளம் கண்டனர்.

அவர் மீது நகரில் உள்ள பல போலீஸ் நிலையங்களில் கிரிமினல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இதனால், ரஞ்சித்தை உடனடியாக கைது செய்ய வேண்டும் என, போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இந்நிலையில், ரவுடி ரஞ்சித், பெங்களூரு பாகலுார் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று காலையில் பாகலுார் புறநகர் பகுதியில் சம்பிகேநகர் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, ஒரு வீட்டில் ரஞ்சித் இருப்பது கண்டறியப்பட்டது. அவரை சரணடையும்படி போலீசார் எச்சரித்தனர்.

அவரோ போலீஸ் ஏட்டை கத்தியால் குத்தி விட்டு தப்பிக்க முயற்சித்தார். இதனால், ஆத்திரம் அடைந்த இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், துப்பாக்கியால் ரஞ்சித்தின் காலில் சுட்டார். நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார்.

அவரை கைது செய்த போலீசார், உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தேவையான முதலுதவிகள் செய்யப்பட்டன. காயம் அடைந்த போலீசாரும் சிகிச்சை பெற்றனர்.

அதேசமயம், பவன் குமார் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மற்ற ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap