Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ முன்னாள் அமைச்சர் பிரபு சவுகான் மகனுக்கு இடைக்கால ஜாமின்

முன்னாள் அமைச்சர் பிரபு சவுகான் மகனுக்கு இடைக்கால ஜாமின்

முன்னாள் அமைச்சர் பிரபு சவுகான் மகனுக்கு இடைக்கால ஜாமின்


ADDED : ஆக 21, 2025 05:50 AM

Follow on Google

ADDED : ஆக 21, 2025 05:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு : பா.ஜ., - எம்.எல்.ஏ., பிரபு சவுகான் மகன் பிரதீக் சவுகானுக்கும், மஹாராஷ்டிராவை சேர்ந்த பெண்ணும் சமூக வலைதளம் மூலம் நண்பர்களாகினர். இது காதலாக மாறியது. இரு வீட்டார் சம்மதத்துடன் 2023 டிசம்பர் 23ல் பிரபு சவுகான் வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது.

பலாத்காரம் அதன் பின், இளம்பெண்ணுடன் பல இடங்களுக்கு சென்ற பிரதீக், அவருடன் நெருக்கமாக பழகி உள்ளார்.

ருமண தேதி குறித்து பெண்ணின் குடும்பத்தினர் கேட்டபோது, எந்த பதிலும் சொல்லாமல் இருந்துள்ளனர்.

இதனால் பீதர் மகளிர் போலீசில், 'தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக', பிரதீக் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு, பெங்களூரு உப்பார்பேட் போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இவ்வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பிரதீக் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு, நீதிபதி முகமது நவாஸ் முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் பிரதீக் தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'என் மனுதாரர் பிரதீக்கிற்கும், புகார் அளித்த பெண்ணுக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடந்தது.

பல சந்தர்ப்பங்களில் இருவரும் ஒன்றாக சென்றுள்ளனர். இருப்பினும், பல காரணங்களால் திருமணம் நடக்கவில்லை. மனுதாரரை கைது செய்ய வேண்டும் என்ற முனைப்பில் போலீசார் உள்ளனர். பிரதீக்கை கைது செய்தால், பெரும் சிரமத்தை சந்திப்பார். எனவே, அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும்' என்றார். .

இளம்பெண் தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'பிரதீக்கிற்கு ஆரம்பத்தில் இருந்தே இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை' என்றார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி முகமது நவாஸ் கூறியதாவது:

2 லட்சம் ரூபாய் மனுதாரரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு வரும் வரை, அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்படுகிறது. ஜாமின் மனு விசாரணையில் இருக்கும் போது, அவர் கைது செய்யப்பட்டால், 2 லட்சம் ரூபாய் தனிப்பட்ட பிணை மற்றும் அதே தொகைக்கு ஒரு நபர் உத்தரவாதத்தின் அடிப்படையில், அவரை விடுவிக்க வேண்டும்.

உப்பார்பேட்டை போலீஸ் விசாரணைக்கு, பிரதீக் ஒத்துழைக்க வேண்டும். அரசு தரப்பு சாட்சிகளை கலைக்ககூடாது.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap