Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சந்தனத்தில் 'டூத் பேஸ்ட்' கே.எஸ்.டி.எல்., ஆராய்ச்சி

 சந்தனத்தில் 'டூத் பேஸ்ட்' கே.எஸ்.டி.எல்., ஆராய்ச்சி

 சந்தனத்தில் 'டூத் பேஸ்ட்' கே.எஸ்.டி.எல்., ஆராய்ச்சி


ADDED : பிப் 23, 2026 04:54 AM

Follow on Google

ADDED : பிப் 23, 2026 04:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கே.எஸ்.டி.எல்., எனும் கர்நாடக சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் நிறுவனம், உலகில் முதன் முறையாக, சந்தனம் பயன்படுத்தி பல் துலக்கும் பேஸ்ட் தயாரிக்க, திட்டம் வகுத்துள்ளது.

இது குறித்து, கே.எஸ்.டி.எல்., அதிகாரிகள் கூறியதாவது:

மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு, டூத் பேஸ்ட் மிக முக்கியமானது. காலை எழுந்ததும் பல் துலக்கிய பின்னரே, எல்லாம் ஆரம்பமாகும். பல்வேறு நிறுவனங்கள், மாறுபட்ட டூத் பேஸ்ட்களை, மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளன.

தற்போது பல் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்துக்காக, சந்தனம் பயன்படுத்தி டூத் பேஸ்ட் தயாரிப்பது குறித்து, கே.எஸ்.டி.எல்., ஆய்வு செய்து வருகிறது. இது உலகிலேயே முதன் முறையாகும். சோதனை வெற்றி அடைந்தால், சந்தனத்தால் தயாரான அழகு சாதனங்கள் மட்டுமின்றி, பல் ஆரோக்கியத்திலும், கர்நாடகா முக்கிய பங்கு வகிக்கும்.

சந்தனத்துக்கு இந்திய கலாசாரம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில், சிறப்பான பங்கு வகிக்கிறது. பண்டைய காலத்தில் இருந்தே, சந்தனம் நோய் எதிர்ப்பு பொருளாக, கிருமி நாசினியாகபயன்படுத்தப்படுகிறது. கே.எஸ்.டி.எல்., ஆராய்ச்சியில் சந்தனத்தில் பற்கள், ஈறுகளை ஆரோக்கியமாக்குவது, வாய்ப்புண், ரத்தப்போக்கு பிரச்னைகளை குறைக்கும், பேக்டீரியாக்களை எதிர்த்து போராடும் குணம் உள்ளது. வீக்கத்தை குறைப்பதுடன், வாய்க்கு இயற்கையான நறுமணத்தை தரும் குணமும் உள்ளது.

சரியான அளவில் பதப்படுத்தப்பட்ட சந்தன எண்ணெயை, மருத்துவ வல்லுநர்களின் வழிகாட்டுதலுடன் பயன்படுத்தினால், மருத்துவ பயன்களை பெறலாம். இவ்வளவு குணங்கள் கொண்ட சந்தனத்தை, அன்றாடம் பயன்படுத்தும் டூத் பேஸ்டில் பயன்படுத்துவது, எளிதான விஷயம் அல்ல.

இதன் அளவு, பாதுகாப்பு, பின் விளைவுகள், பயன் உட்பட, அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு, கே.எஸ்.டி.எல்., விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனர்.

டூத் பேஸ்ட் மட்டுமின்றி, சந்தனம் அடிப்படையிலான ஹேர் ஆயில் தயாரிப்பதிலும், கே.எஸ்.டி.எல்., ஆர்வம் காட்டுகிறது. கூந்தல் உதிர்வை தடுப்பது, பொடுகு பிரச்னையை போக்குவது, தலை சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை, சந்தனத்துக்கு உள்ளது. மனதை அமைதிப்படுத்தும் சிறப்பு குணமும், இதற்கு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap