/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பாகிஸ்தானுக்கு சுற்றுலா செல்லுங்கள் காங்., தலைவர்கள் மீது ஷோபா பாய்ச்சல்
/
பாகிஸ்தானுக்கு சுற்றுலா செல்லுங்கள் காங்., தலைவர்கள் மீது ஷோபா பாய்ச்சல்
பாகிஸ்தானுக்கு சுற்றுலா செல்லுங்கள் காங்., தலைவர்கள் மீது ஷோபா பாய்ச்சல்
பாகிஸ்தானுக்கு சுற்றுலா செல்லுங்கள் காங்., தலைவர்கள் மீது ஷோபா பாய்ச்சல்
ADDED : மே 17, 2025 11:20 PM

மல்லேஸ்வரம்: ''ஆப்பரேஷன் சிந்துார்' தாக்குதலுக்கு, சாட்சியம் கேட்கும் காங்கிரஸ் தலைவர்களை, பாகிஸ்தானுக்கு சுற்றுலா அனுப்ப முதல்வர் சித்தராமையா ஏற்பாடு செய்ய வேண்டும்,'' என, மத்திய அமைச்சர் ஷோபா அறிவுறுத்தினார்.
பெங்களூரின் மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:
பாகிஸ்தானை எதிர்த்து நம் ராணுவத்தினர் போராட்டம் நடத்தினர். இவர்களின் போராட்டம் பற்றி காங்கிரசாரின் நிலைப்பாடு என்ன என்பதை, மேலிடம் தெளிவுப்படுத்த வேண்டும்.
ஆளுக்கொரு விதம்
மத்திய அரசின் அனைத்து முடிவுகளுக்கும் ஒத்துழைப்பு அளிப்பதாக, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருந்தார். ஆனால் இப்போது, கர்நாடகா உட்பட வெவ்வேறு மாநிலங்களின் காங்., தலைவர்கள், ஆளுக்கொரு விதமாக பேசுகின்றனர். இதுபோன்று பேசும்படி, அக்கட்சி மேலிடம் உத்தரவிட்டதா; இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் பதுங்குமிடங்களை உள்ளேயும், வெளியேயும் நம் ராணுவம் அழித்தது. இதில் பலியான பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு, பாகிஸ்தான் அரசு பணம் கொடுத்துள்ளது.
இப்போது ராணுவத்தினர் தாக்குதலுக்கு சாட்சி என்ன என்று காங்கிரசார் கேட்கின்றனர். இதன் மூலம் நம் ராணுவத்தினரை அவமதிக்கின்றனர்.
இதற்கு முன்பு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடந்தபோதும், சாட்சி கேட்டனர். இப்போது 'ஆப்பரேஷன் சிந்துார்'க்கு சாட்சியம் கேட்கின்றனர். முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் தலைவர்களின் வாயை மூட வேண்டும். இல்லாவிட்டால் தன் கட்சித் தலைவர்களை, பாகிஸ்தானுக்கு சுற்றுலா அனுப்பட்டும். அவர்களே அங்கு சென்று, சாட்சியங்களை சேகரித்து வரட்டும்.
வெடிகுண்டு
அமைச்சர் ஜமீர் அகமது கான், மனித வெடிகுண்டாக மாறி, பாகிஸ்தானுக்கு செல்வதாக கூறினார்.
அவர் மனித வெடிகுண்டாக செல்ல வேண்டாம்; அந்நாட்டுக்கு சுற்றுலா செல்லட்டும். இவர்களின் தலைவர் ராகுல், வெளிநாடுகளில் இந்தியாவை பற்றி அவமதிப்பாக பேசுகிறார்.
தேர்தல் வரும்போது, அரசியல் செய்யலாம். நாட்டின் போர் சூழலிலும் அரசியல் அவசியமா? இத்தகைய தலைவர்களை, மகளிர்கள் கண்டிக்கின்றனர். காங்கிரஸ் தலைவர்களுக்கு கருப்புக் கொடி காட்ட வேண்டும்.
மூவர்ண கொடி யாத்திரையை பா.ஜ., நடத்தவில்லை. மக்களே நடத்துகின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.