Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ செல்வாக்கை உயர்த்தி கொள்ள சித்தராமையா ஆர்வம்

செல்வாக்கை உயர்த்தி கொள்ள சித்தராமையா ஆர்வம்

செல்வாக்கை உயர்த்தி கொள்ள சித்தராமையா ஆர்வம்


ADDED : ஆக 06, 2025 08:54 AM

Follow on Google

ADDED : ஆக 06, 2025 08:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தன் தலைமையிலான அரசு மற்றும் தன் இமேஜை அதிகரித்துக் கொள்வதில், முதல்வர் சித்தராமையா ஆர்வம் காட்டுகிறார். இதனால் மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு திட்டம் வகுத்து வருகிறார்.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. அடுத்த சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ளன. அடுத்த தேர்தல் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடக்க வேண்டும் என்பது, அவரது ஆதரவாளர்களின் விருப்பமாகும்.

அரசியல் புரட்சி இதற்கிடையே கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா, செப்டம்பரில் அரசியல் புரட்சி நடக்கும் என, வாய் ஓயாமல் கூறுகிறார். எனவே முதல்வர் மாற்றப்படலாம் என, சில அமைச்சர்கள் நினைக்கின்றனர்.

இது, முதல்வர் சித்தராமையாவின் ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை எரிச்சலடைய வைத்துள்ளது. அப்படி நடக்க விடக்கூடாது என, அவர்கள் கருதுகின்றனர்; சித்தராமையாவின் செல்வாக்கை அதிகரிக்க முயற்சிக்கின்றனர்.

கடந்த 2023 சட்டசபை தேர்தலுக்கு முன், சித்தராமையாவின் பிறந்த நாளை முன்னிட்டு, தாவணகெரேவில் 'சித்தராமோத்சவம்' நடத்தினர். 2024ம் ஆண்டு டிசம்பரில் ஹாசனில், 'சித்தராமோத்சவம்' நடத்த தயாராகி வந்தனர். இவ்விஷயம், அவரது எதிர் தரப்புக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.

'கட்சியை ஓரங்கட்டி, தனிநபரை முன்னிலைப்படுத்துவது சரியல்ல. கட்சிக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நபரை விட, கட்சியே முக்கியம்' என, கருத்து தெரிவித்தனர்.

மாஸ் லீடர் இதை கவனத்தில் கொண்ட காங்கிரஸ் மேலிடம், 'சித்தராமோத்சவம்' நடத்த வேண்டாம் என, உத்தரவிட்டது. அதனால், 'மக்கள் நலன் மாநாடு' நடத்தினர். தற்போது சித்தராமையாவை மாஸ் லீடராக உருவாக்குவது, அவரது ஆதரவாளர்களின் எண்ணமாகும். இவர்களே 'குட்டி தலைவர்கள்' ஆக செயல்பட துவங்கி உள்ளனர். இதில் சித்தராமையாவும் ஆர்வம் காட்டுகிறார்.

சில நாட்களுக்கு முன் தொகுதி நிதியுதவி, மேம்பாட்டுப் பணிகள் குறித்து, எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்கள், மாநில சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு மற்றும் முதல்வரின் இமேஜை உயர்த்தும்படி, ஆலோசனை கூறியுள்ளனர்.

எஸ்.எம். கிருஷ்ணா முதல்வராக இருந்தபோது, அமைச்சர்களுடன், சாலை வழியாக மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இது, கிருஷ்ணாவின் செல்வாக்கை அதிகரிக்க காரணமானது. அதேபோன்று நீங்களும் செய்யுங்கள் என, 'ஐஸ்' வைத்துள்ளனர்.

இதன் ஒரு கட்டமாக அமைச்சர்களுடன், சாலை வழியாக சுற்றுப்பயணம் செல்ல சித்தராமையா ஆலோசிக்கிறார். கட்சியின் இமேஜும் உயரும் என்பதால், மேலிடமும் அனுமதியளிக்கும் என்பது முதல்வரின் எண்ணமாகும்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap