/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பானு முஷ்டாக்கிற்கு எதிராக அப்பீல் உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
/
பானு முஷ்டாக்கிற்கு எதிராக அப்பீல் உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
பானு முஷ்டாக்கிற்கு எதிராக அப்பீல் உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
பானு முஷ்டாக்கிற்கு எதிராக அப்பீல் உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
ADDED : செப் 18, 2025 11:09 PM
மைசூரு தசராவை, 'புக்கர்' விருது பெற்ற பானு முஷ்டாக் துவக்க தடை கோரிய மனுவை, தள்ளுபடி செய்த கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனு, இன்று விசாரணைக்கு வருகிறது.
மைசூரு தசரா விழா வரும் 22ம் தேதி துவங்குகிறது. இவ்விழாவை, புக்கர் பரிசு பெற்ற பானு முஷ்டாக் துவக்கி வைப்பார் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
இதற்கு எதிராக, பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா உட்பட சிலர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், தடை விதிக்க முடியாது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. நேற்று தலைமை நீதிபதி கவாய், நீதிபதி வினோத் சந்திரன் தலைமையில் நீதிமன்றம் கூடியது.
அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல் அளித்த மனுவில், 'மைசூரு தசரா வரும் 22ம் தேதி துவங்குகிறது. மைசூரு சாமுண்டீஸ்வரியை வழிபட ஹிந்து அல்லாத ஒருவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது அங்குள்ள மரபுகளுக்கு எதிரானது. எனவே, இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி கவாய், 'இம்மனு நாளை (இன்று) விசாரிக்கப்படும்' என்று தெரிவித்தார்
- நமது நிருபர் -.