தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிவகுமாரின் நிபந்தனைக்கு வியாபாரிகள் சங்கம் கண்டனம்

 சிவகுமாரின் நிபந்தனைக்கு வியாபாரிகள் சங்கம் கண்டனம்

 சிவகுமாரின் நிபந்தனைக்கு வியாபாரிகள் சங்கம் கண்டனம்


ADDED : மார் 23, 2026 01:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2026 01:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'சாலையோரங்களில் வியாபாரம் செய்ய பதிவு செய்திருக்க வேண்டும்' என, துணை முதல்வர் சிவகுமார் கூறியதற்கு, மாநில சாலையோர வியாபாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்திற்கான 2026 - 2027ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் குறித்து, பெங்களூரு எம்.எல்.ஏ.,க்களுடன், துணை முதல்வர் சிவகுமார் சில நாட்களுக்கு முன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் அவர் பேசியதாவது:

சாலையோர வியாபாரிகள் எங்கு வியாபாரம் செய்ய வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிப்போம். முறைப்படி பதிவு செய்தவர்களுக்கு மட் டுமே வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்படும். இதற்கு அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் ஒப்பு கொண்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

சிவகுமாரின் பேச்சுக்கு கர்நாடகா பிரகதி பாரா சாலையோர வியாபாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து, அச்சங்கத்தினர் கூறியதாவது:

சாலையோரங்களில் தள்ளுவண்டிகளில் கடைகள் நடத்தும் பலருக்கும் அடையாள அட்டைகள் இதுவரை வழங்கப்படவில்லை. மேலும், ஆயிரக்கணக்கானோர் இன்னும் பதிவு செய்ய வேண்டி உள்ளது. எனவே, ஜி.பி.ஏ.,வின் புதிய கொள்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லையெனில், மாநில அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடக்கும்.

தெருவோர வியாபாரிகள் மீது மாநில அரசு தாக்குதல் நடத்துகிறது.சிவகுமார்தன் வார்த்தைகளை வாபஸ் பெற வேண்டும். நாங்கள் வியாபாரம் செய்வதற்கு அரசு தடை விதிக்கிறது. இதனால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இது, சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us