Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஆடு மேய்ப்பவரை கொன்ற கரடியை சாகடித்த கிராமத்தினர்

 ஆடு மேய்ப்பவரை கொன்ற கரடியை சாகடித்த கிராமத்தினர்

 ஆடு மேய்ப்பவரை கொன்ற கரடியை சாகடித்த கிராமத்தினர்


ADDED : மார் 03, 2026 06:27 AM

Follow on Google

ADDED : மார் 03, 2026 06:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விஜயநகரா: ஆடு மேய்ப்பவரை தாக்கி கொன்ற கரடியை, கிராமத்தினர் அடித்து கொன்றனர்.

விஜயநகரா மாவட்டம், கூட்லகி தாலுகாவின், குடேகோட்டேவின் ஹாலசாகரா என்ற கிராமத்தில் வசித்தவர் ஓபய்யா, 45. இவருக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவர் ஆடுகளை மேய்ப்பதற்காக, நேற்று மதியம் 1:00 மணியளவில், வனப்பகுதிக்கு சென்றிருந்தார்.

ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த போது, அங்கு வந்த கரடி, அவர் மீது பாய்ந்து தாக்கியது. அவரது தலை, கால், கை என, உடலின் பல இடங்களில் பிராண்டியது. பலத்த காயமடைந்த ஓபய்யா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதை பார்த்த சிலர் போலீசாருக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த அதிகாரிகள், கரடியை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

கரடி தாக்கி ஓபய்யா இறந்ததை அறிந்த கிராமத்தினர் வனப்பகுதிக்கு வந்தனர். அங்கேயே சுற்றிக் கொண்டிருந்த கரடியை பார்த்து கோபமடைந்தனர். உருட்டுக்கட்டை, கடப்பாறையால் தாக்கி கொன்றனர். கூட்லகி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap