ADDED : ஜூன் 15, 2026 10:27 PM
அ நிறம் | அளவு
சாம்ராஜ்பேட்: பைக் மீது குப்பை லாரி மோதியதில், தொழிலாளி உயிரிழந்தார்.
பெங்களூரின் கோரிபாளையாவில் வசித்தவர் சதீஷ், 35; கட்டட தொழிலாளி. நேற்று காலை நண்பர் பிரவீனுடன், பைக்கில் சாம்ராஜ்பேட் சிர்சி சதுக்கம் பகுதியில் சென்றார்.
அந்த வழியாக வேகமாக வந்த மாநகராட்சி குப்பை லாரி, பைக் மீது மோதியது. பைக்கில் இருந்து துாக்கி வீசப்பட்ட, சதீஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பிரவீன் படுகாயம் அடைந்தார். விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டியர், சாம்ராஜ்பேட் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த போலீசார், லாரி டிரைவரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர். சதீஷ், பிரவீன் பாதுகாப்பு இல்லாத அரை ஹெல்மெட் அணிந்து பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.
