ADDED : ஜூன் 15, 2025 11:26 PM

மைசூரு: சர்வதேச யோகா தினத்தை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில் நேற்று ஒத்திகை நடந்தது.
சர்வதேச யோகா தினம் வரும் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஆந்திர மாநிலம், விசாகபட்டினத்தில் நடக்கும் யோகாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
அதுபோன்று, 11வது ஆண்டாக மைசூரு அரண்மனை வளாகத்தில் யோகா தினம் கொண்டாடப்படுகிறது. 'ஒரு உலகம், ஒரு சுகாதாரத்துக்கு யோகா' என்ற கருப்பொருளில் இந்தாண்டு யோகா நடக்கிறது.
மைசூரு அரண்மனை வளாகத்தில் நேற்று ஆயுஷ் துறை சார்பில் யோகா ஒத்திகை நடத்தப்பட்டது. இதில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, யோகா மையம், என்.சி.சி., - என்.எஸ்.எஸ்., சாரணர் - சாரணியர், ஆயுஷ் துறை அதிகாரிகள் என 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தட் ஆசனம், விருக் ஷாசனம், பாதஹஸ்தாசனம், அர்தா சக்ராசனம், திரகோணாசனம், பத்ராசனம், வஜ்ராசனம் என ஆசனங்கள் செய்தனர். காலையில் லேசான மழை சாரல் பெய்தபோதும், பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இந்தாண்டு நடக்கும் யோகாவில், 15 ஆயிரம் பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.