/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
யு.பி.ஐ.,யில் பணம் அனுப்பினால் 15 வினாடிக்குள் போய் சேரும்
/
யு.பி.ஐ.,யில் பணம் அனுப்பினால் 15 வினாடிக்குள் போய் சேரும்
யு.பி.ஐ.,யில் பணம் அனுப்பினால் 15 வினாடிக்குள் போய் சேரும்
யு.பி.ஐ.,யில் பணம் அனுப்பினால் 15 வினாடிக்குள் போய் சேரும்
ADDED : ஜூன் 16, 2025 11:01 PM

புதுடில்லி :யு.பி.ஐ., பணப் பரிவர்த்தனைகள் இன்னும் விரைவாக நிறைவேற்றப்படும் வகையில், தேசிய பணப் பரிவர்த்தனை நிறுவனமான என்.பி.சி.ஐ., புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதையடுத்து நேற்று முதல் யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் மேலும் வேகமாக நிறைவேற துவங்கின.
யு.பி.ஐ., பணப் பரிமாற்றம், பரிவர்த்தனை நிலை மற்றும் திருப்பி அனுப்பப்படுவதற்கான நடைமுறையை 30ல் இருந்து 15 வினாடிகளுக்குள் நிறைவேற்ற, அனைத்து வங்கிகள் மற்றும் பேமென்ட் சேவை நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இம்மாத இறுதிக்குள் அனைவரும் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, இன்னும் சில மாற்றங்கள் ஆக., 1 முதல் வரவுள்ளன. வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் உள்ள இருப்பை நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 50 முறை தான் சரிபார்க்க முடியும்.
எஸ்.ஐ.பி., திட்டங்கள், நெட்பிளிக்ஸ் உள்ளிட்டவற்றுக்கு செலுத்த வேண்டிய தொகையை, வங்கிகள் அந்தந்த தேதியில் தாமாக பிடித்துக் கொள்ளும் வசதி, யு.பி.ஐ., மேன்டேட் எனப்படுகிறது.
இந்நிலையில், இந்த வசதி நெரிசல் நேரமான காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும்; மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் இயங்காது.