/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை
/
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை
UPDATED : ஜூன் 07, 2024 10:47 AM
ADDED : ஜூன் 07, 2024 10:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. 6.5 சதவீதமாகவே நீடிக்கும்
மும்பையில் நிருபர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. இந்த விகிதம் 6.5 சதவீதமாகவே நீடிக்கும். பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்க ஏதுவாக ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படவில்லை.
2024 - 25 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக நீடிக்கும். அது முதல் மற்றும் 3ம் காலாண்டில் 7.3 % ஆகவும், இரண்டு மற்றும் 4ம் காலாண்டில் 7.2% ஆகவும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.