/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
மகளிர் குழுக்களுக்கு கடன் மத்திய அமைச்சகம் ஒப்பந்தம்
/
மகளிர் குழுக்களுக்கு கடன் மத்திய அமைச்சகம் ஒப்பந்தம்
மகளிர் குழுக்களுக்கு கடன் மத்திய அமைச்சகம் ஒப்பந்தம்
மகளிர் குழுக்களுக்கு கடன் மத்திய அமைச்சகம் ஒப்பந்தம்
ADDED : ஜன 11, 2024 11:51 PM

புதுடில்லி:சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள் வழங்குவதை எளிதாக்கும் வகையில், எஸ்.பி.ஐ.,யுடன், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுஉள்ளது.
கிராமப்புற சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் நிதியுதவிகளை எளிதாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகமும், பாரத ஸ்டேட் வங்கியும் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோருக்கு 5 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குவதற்கான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள 'ஸ்வயம் சித்தா' என்ற சிறப்பு நிதி தயாரிப்பை எஸ்.பி.ஐ., அறிமுகப்படுத்தியுள்ளது.