ADDED : செப் 12, 2025 01:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் 'ஆல்கார்கோ சப்ளை செயின்' நிறுவனம், சென்னையை அடுத்த பனப்பாக்கத்தில் புதிய கிடங்கு ஒன்றை திறந்துள்ளது. மொத்தம் 2.75 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த கிடங்கு, தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளது.
இந்நிறுவனத்துக்கு ஏற்கனவே பெங்களூருவில் ஒரு கிடங்கு உள்ள நிலையில், தென் மாநிலங்களில் தன் இருப்பை வலுப்படுத்தும் விதமாக பனப்பாக்கத்தில் கிடங்கு வசதியை துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதிகளவிலான சரக்குகளை விரைவாகவும், திறமையாகவும் கையாளும் வகையில் இந்த கிடங்கு அமைக்கப்பட்டுள்ளதாகஆல்கார்கோ நிர்வாக இயக்குநர் கேத்தன் குல்கர்னி தெரிவித்துள்ளார்.

