'ராம்ராஜ் காட்டன்' அம்பாசிடராக நடிகர் ரிஷப் ஷெட்டி நியமனம்
'ராம்ராஜ் காட்டன்' அம்பாசிடராக நடிகர் ரிஷப் ஷெட்டி நியமனம்
ADDED : ஜன 27, 2024 02:11 AM

சென்னை:ராம்ராஜ் வேட்டிகள், சட்டைகள் மற்றும் குர்தாக்களின் புதிய பிராண்டு அம்பாசிடராக, நடிகர் ரிஷப் ஷெட்டியை நியமித்துள்ளதாக, 'ராம்ராஜ் காட்டன்' நிர்வாக இயக்குனர் அருண் ஈஸ்வர் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரிஷப் ஷெட்டியை அறிமுகம் செய்து, அருண் ஈஸ்வர் மேலும் கூறியதாவது:
முதன் முதலாக நடிகர் ரிஷப் ஷெட்டி, எங்கள் ராம்ராஜ் பிராண்டுடன் இணைந்திருப்பது எங்களுக்கு பெருமையான தருணம். இவர் தனது 'பான் இந்தியா' வெற்றி படமான காந்தாரா வாயிலாக அதை நிரூபித்துள்ளார். கலாசாரத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்.
பாரம்பரிய வேட்டியை அணியும் சில இந்திய நடிகர்களில் இவரும் ஒருவர் என்பது மிகவும் தனித்துவமானது. அதுதான் அவருடன் எங்களை தொடர்புகொள்ள ஈர்த்தது. தென்னிந்திய மாநிலங்களைத் தாண்டி, வட இந்தியாவிலும் விரிவடைந்து வருவதால், இந்த இணைப்பு எங்கள் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.

