sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

டில்லியில் பாரத் சர்வதேச அரிசி மாநாடு வரும் 30 , 31 தேதிகளில் நடக்கிறது

/

டில்லியில் பாரத் சர்வதேச அரிசி மாநாடு வரும் 30 , 31 தேதிகளில் நடக்கிறது

டில்லியில் பாரத் சர்வதேச அரிசி மாநாடு வரும் 30 , 31 தேதிகளில் நடக்கிறது

டில்லியில் பாரத் சர்வதேச அரிசி மாநாடு வரும் 30 , 31 தேதிகளில் நடக்கிறது


UPDATED : அக் 17, 2025 09:46 AM

ADDED : அக் 17, 2025 01:19 AM

Google News

UPDATED : அக் 17, 2025 09:46 AM ADDED : அக் 17, 2025 01:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: உலகளாவிய அரிசி வர்த்தகத்தில், 'பாரத் சர்வதேச அரிசி மாநாடு 2025' இந்தியாவின் மதிப்பை மேலும் வலுப்படுத்தும் என மத்திய உணவு அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்து உள்ளார்.

டில்லியில் வரும் 30, 31 ஆகிய இரண்டு நாட்கள், பாரத் மண்டபத்தில் நடைபெறும் மாநாட்டில், அரிசி வினியோக தொடரில் இடம்பெற்றுள்ள விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் உலகளாவிய வர்த்தகர்கள் பங்கேற்க உள்ளனர்.

இது குறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளதாவது: உலக சந்தையில் நம் பங்களிப்பை விரிவுபடுத்தும் அதே வேளையில், பொது வினியோக திட்டத்தின் வாயிலாக அனைத்து மக்களுக்கும் இலவசமான, பாதுகாப்பான உணவு தானியம் கிடைப்பதை உறுதி செய்வது அவசியம். விவசாயிகள், நுகர்வோரை மையப்படுத்தி, ஏற்றுமதியில் வளர்ச்சி அடையும்போது, உணவு பாதுகாப்புடனும் இணைந்து விவசாயிகளின் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்.

Image 1483049

அடுத்த 5 ஆண்டுகளில், பொது வினியோக முறையை சீரமைத்து நவீனமயமாக்குதல், வேளாண், வேளாண் பொருட்கள் சார்ந்த ஏற்றுமதிகளை இரட்டிப்பாக்குதல் , இந்திய அரிசிக்கான புதிய சந்தைகளை கண்டறிதல் ஆகியவை முக்கிய இலக்குகளாக நிர்ணயித்து உள்ளோம்.

இந்த இலக்குகளை அடைவதற்கான பயணத்தில், பாரத் சர்வதேச அரிசி மாநாடு 2025 ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும். இது 'வளர்ந்த பாரதம் 2047' என்ற தொலைநோக்கு பார்வையை எட்ட முக்கியமானது ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us