ADDED : ஜன 10, 2024 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக மின் வாரியம், திருவள்ளூர் மாவட்டத்தில், வட சென்னை - 3 என்ற பெயரில், 800 மெகா வாட் திறனிலும்; எண்ணுார் சிறப்பு, 1,320 மெகா வாட் திறனிலும்; எண்ணுார் விரிவாக்கம், 660 மெகா வாட் திறனிலும் அனல் மின் நிலையங்களை அமைத்து வருகிறது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் வாயிலாக, பல்வேறு தொழில் நிறுவனங்கள், உற்பத்தி துறையில், 3.79 லட்சம் கோடி ரூபாய்க்கும்; தகவல் தொழில்நுட்ப துறையில், 22,130 கோடி ரூபாய்க்கும் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
அந்த நிறுவனங்கள், தொழிற்சாலை கட்டுமான பணிக்கும், ஆலைகளை இயக்கவும் அதிக மின்சாரம் தேவை. எனவே, புதிய அனல் மின் திட்டங்களின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்குமாறு, பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டு உள்ளது.

