தொழில்நுட்ப கல்வி ஆசிரியர்களுக்கு நிறுவனங்களில் நேரடி பயிற்சி மாதம் ரூ.1 லட்சம் உதவி தொகை
தொழில்நுட்ப கல்வி ஆசிரியர்களுக்கு நிறுவனங்களில் நேரடி பயிற்சி மாதம் ரூ.1 லட்சம் உதவி தொகை
ADDED : செப் 22, 2025 11:20 PM

சென்னை : ஏட்டுக் கல்வி, தொழிற் திறன் இடையே மாணவர்களிடம் உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில், தொழில்நுட்ப கல்வி பயிற்றுவிக்கும் பேராசிரியர்களுக்கு, நிறுவனங்களில் நேரடி பயிற்சி வழங்கும் திட்டத்தை ஏ.ஐ.சி.டி.இ அறிமுகம் செய்துள்ளது.
'தொழில்துறை உதவித் தொகை' திட்டமான இதில், மாதம் 1 லட்சம் ரூபாய் உதவித் தொகையுடன், பேராசிரியர்கள் தொழில்நிறுவனங்களில் பயிற்சி பெறவுள்ளனர்.
தொழில் துறைக்கு தேவையான திறன்களுடன் பட்டதாரிகளை தேர்ந்தெடுப்பதில் நிறுவனங்கள் சவால்களை சந்தித்து வருகின்றன. புதிதாக பட்டம் பெற்று, தொழில்துறை நிறுவனங்களில் பணியில் சேர்பவர்களுக்கு, விரிவான பயிற்சியும் அவசியமாகிறது. இதற்கு, தொழில்துறையில் வேகமாக அதிகரித்து வரும் தொழில்நுட்ப மாற்றங்களே காரணம்.
இதுகுறித்து, தொழில்நுட்ப கல்வி பேராசிரியர்களுக்கு, விழிப்புணர்வு குறைவாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு, பேராசிரியர்களுக்கு நேரடி தொழில்துறை அனுபவங்களை வழங்கினால், மாணவர்களுக்கு அதை பயிற்றுவிப்பது எளிதாக இருக்கும் என்ற வகையில், தொழில்துறை ஊக்குவிப்பு திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு https://ifp.aicte.gov.in என்ற இணையதளத்தில் அக்., 15ம் தேதிக்குள் பேராசி ரியர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிகள், டிச., 1ம் தேதி துவங்கும் என ஏ.ஐ.சி.டி.இ., தெரிவித்துள்ளது.
2025-26ம் கல்வியாண்டில் 350 பேராசிரியர்களுக்கு, தொழில்துறை நிறுவனங்களுடன் இணைந்து, நேரடி பயிற்சி 3 அல்லது 5 ஆண்டுகளில், ஆண்டுதோறும் 1,500 பேராசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கும் வகையில் திட்ட விரிவாக்கம் பேராசிரியர்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ மாதம் 75,000 ரூபாய்; தொழில்துறை நிறுவனம் 25,000 ரூபாய் உதவித் தொகை