கோவை, மதுரையில் ஆராய்ச்சி பூங்கா தொழில் துறை பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி
கோவை, மதுரையில் ஆராய்ச்சி பூங்கா தொழில் துறை பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி
ADDED : ஜூன் 06, 2025 12:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தொழில் துறையினர் சந்திக்கும் சவால், பிரச்னைகளுக்கு ஆராய்ச்சி வாயிலாக தீர்வு காண, 'டிட்கோ' நிறுவனம் முடிவு செய்துஉள்ளது.
தமிழகத்தில் ஆராய்ச்சி வாயிலாக புதிய கண்டுபிடிப்பு, தொழில் துறையினர் சந்திக்கும் பிரச்னை, சவால்களுக்கு நிரந்தர தீர்வு காண்பது ஆகியவற்றை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக கல்வி துறை, தொழில் துறை, அரசை ஒருங்கிணைத்து பல்கலை ஆராய்ச்சி பூங்கா அமைக்கும் பணியில், 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
முதலாவது ஆராய்ச்சி பூங்கா, கோவை டைடல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பூங்காவை மதுரை காமராஜர் பல்கலை வளாகத்தில் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது.